Saturday, October 11, 2014

நுகர்வோருக்கான முக்கிய உரிமைகள்

பொது மக்கள் ஒவ்வொருவரும் நமக்கான நுகர்வோர் உரிமைகள் என்ன என்பதை அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. இதை புரிந்து கொள்ள ஒரு சட்ட நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில அடிப்படை விஷயங்களை தெரிந்துக் கொள்வதன் மூலம் நமது பணம் நேரம் போன்றவை மிச்சமாகும், அதே நேரம் நன்மைகளையும் பெறலாம்.



* ஒரு பொருளை வாங்கிய பிறகு அது பிடிக்கவில்லை என்று மீண்டும் அதே கடையில் பொருளைத் திருப்பிக் கொடுத்து பணத்தை பெற நமக்கு உரிமையில்லை. எனவே ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பே சரிவர பார்த்து வாங்க வேண்டும், பொருளுக்குரிய விதிகளை நன்கு அறியவும் வேண்டும்.

* ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை நுகர்ருவோருக்கு எப்போதும் இருப்பதில்லை, எனவே ஒப்பந்தத்தை புரிந்துகொள்வது நல்லது. ஒரு வேளை ரத்து செய்யும் உரிமை இருக்கும் என்றால் அதற்கான குறிப்பு ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிடப் பட்டிருக்கும்.

* ஒரு பொருளை உறுதிமொழியுடன் அதாவது வாரண்டியுடன் வாங்கியிருந்தால் அந்த பொருள் தரமானதாக இல்லை என்றால் வாங்கிய நிறுவனத்திலோ அல்லது தயாரித்த நிறுவனத்திடமோ கொடுத்து அதற்க்கான பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

* ஒரு பொருளை அந்த பொருளுக்கென நிர்ணயிக்கப் பட்ட விலையில் நுகருவோருக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் கடைக்காரருக்கு இல்லை, அதே நேரத்தில் அதிகப் பட்ச விலை நிர்ணயிக்கப் பட்டிருந்தால் அந்த விலைக்கு அதிகமாக விற்கமுடியாது.

* சில்லறை வர்த்தகங்கள்,  தரம் குறைந்த பொருட்களை கணினி மூலமாக விற்றிருந்தால்  ஏழு நாட்கள் அவகாசத்தை சார்ந்திருக்க முடியாது. நுகர்வோர் சாதாரணமாக மூன்று அல்லது நான்கு வார காலத்திற்குள் அந்த அப்பொருளை திருப்பி கொடுக்க முடியும். அப்பொருள் விற்பனைக்காக கடையில் வைக்கப் படும்போது அது ஒரு அழைப்பிதழாக  சட்டப் பூர்வமாக அறிவிக்கப் படுகிறது. வாங்குபவர்  பணம் கொடுக்கும்போது அந்த விற்பனை ஒரு ஒப்பந்தமடைகிறது. கடை உரிமையாளர் பணத்தை பெற்று  பொருளைக் கொடுக்கும்போது அந்த ஒப்பந்தம் முழுமை பெறுகிறது.

* கார் விற்பனை செய்பவர், திடீரென்று ஆசைப்பட்டு கார் வாங்குவோருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அந்த வர்த்தக ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே திருப்பி கொடுக்க வேண்டும். அதனால் உணர்ச்சிவசப்பட்டு, கார் வாங்குபவர்களே கவனமாக இருங்கள்.

* நீங்கள் சகல விதிமுறைகளையும் வாசித்து அறிந்து கொண்டீர்கள் என்று கடைக்காரரிடம் தெரியப்படுத்தினால் நீங்கள் விதிகளை வாசித்துவிட்டீர்கள், புரிந்துக் கொண்டு மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டீர்கள் என்று இந்திய நாட்டின் சட்டம் கருதுகிறது. எனவே பின்னாளில் உங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படுமானால் ‘நான் அந்த விதிகளை வாசிக்கவில்லை’ என்று நீங்கள்  மறுக்க முடியாது.

* ஒரு ட்ராவல்  ஏஜென்சி மூலம் நீங்கள் விடுமுறை கால டிக்கெட் எடுத்திருந்தால் அதற்காக கடன் அட்டையை பயன்படுத்தியிருந்தால் அந்த விடுமுறை நிறுவனம் கலைக்கப் பட்டிருந்தால்/வணிக செயல்பாடுகளை நிறுத்தியிருந்தால் அந்த விடுமுறை பயணச்சீட்டு கணக்கில் வராது.  ஏனென்றால்  நீங்கள் ஒரு ஏஜென்டிடம் பணம் கொடுக்கும் போது கிரெடிட் கார்ட் கம்பெனிகள் அதற்கான செலவை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை..

* புதிய கார் வாங்கினாலும் பழைய கார் வாங்கினாலும் உங்களுக்கான நுகர்வோர் உரிமைகளில் எந்த மாறுபாடும் இல்லை.

* நீங்கள் ஒரு பொருளை வாங்கும் பொழுது நிறுவன தொழிலாளர்கள் அதை உங்கள் வீட்டிற்கு வந்தும் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் அந்த அப்பொருளை கம்பெனிக்கு மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. அதை உங்கள் வீட்டு வாசலில் அவர்கள் சட்டபூர்வமாக வைத்துவிட்டு போகலாம். அல்லது அந்த பொருளை திரும்பவும் கம்பெனிக்கு கொண்டு போவதற்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கலாம்.

மேலும் , முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் வர்த்தக நிறுவனங்கள் ஒரு தடவை விற்ற பொருட்களை  மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் கடமை இல்லை. பல கடைகளில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விற்கப்பட்ட பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு தகுந்ததாக இருப்பின் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இது நல்லெண்ண வெளிப் பாடு தானே தவிர சட்டத்தன்மை வாய்ந்த வரைமுறை இல்லை.