Friday, August 8, 2014

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை (Flax seed/linseed)

பார்பதற்கு ஆளி விதை, கொள்ளு போன்று பிரவுன் நிறத்தில் இருக்கும். பண்டைய காலத்தில் இந்த ஆளிவிதையை உடையாக பலர் அணிந்து வந்திருக்கின்றனர். பருத்தி பயன்பாட்டிற்கு  வருவதற்கு முன்பு லினன் துணிகள் இந்த ஆளி விதையில் இருந்து உற்பத்தி செய்யபட்டிருகின்றன.



பிற தாவர உணவுகளை விட 75 முதல் 800 மடங்குகள் அதிக அளவிலான lignans ஆளி விதையில் உள்ளன. ஆளி விதையில் எளிதில்  கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன .

ஆளி விதையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் உள்ளன அவற்றில் முக்கியமானவை ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலங்கள். இவை இதயத்திற்கு உகந்தவை. உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து /குறைத்து எடையை சீராக வைக்க உதவுகின்றன. ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது.

லிக்னான்ஸ் (Lignans)ஆளி விதையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் எதிர்ப்பு குணங்கள் உள்ளன .

மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது ஆளி விதை . மேலும் அந்நாட்களில் ஹார்மோன் மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் எரிச்சல் hot flash ஆகியவற்றை குறைக்கவும்இந்த விதைகள் உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

anti inflammatory குணம் என்பது நாளங்களில் கட்டிகள் வாதம் அழற்சி உருவாகாமல் தடுப்பது ..
மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் இந்த ஆளி விதைக்கு உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

ஆளிவிதையின் சிறப்பு!

இதனை ஒன்றிண்டாக உடைத்து மாவாக சமையலில் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படியே சாப்பிடக்கூடாது .இதனை சமைக்கும்போது பிசுபிசுவென கொழ கொழப்பு தன்மையுடன் வரும்.  இந்த தன்மை குடலுக்கு மற்றும் ஜீரணத்திற்கு மிகவும்  நல்லது. எளிதில் சீரணமாகி மலசிக்கல் ஏற்படாமல் மற்றும் கழிவுகளை துப்புரவு செய்து விடுகின்றது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது.

இதனை புளியோதரை மற்றும் வற்றல் குழம்பு செய்யும்போது சற்று வறுத்து பொடியாக கலந்து சமைக்கலாம். மேலும் ப்ரெட் செய்யும்போது இதன் அரைத்த மாவை ப்ரெட் மாவுடன் கலந்து ப்ரெட் செய்யலாம். வெளிநாட்டில் இந்த ரொட்டி பிரபலம் .linseed bread என்பார்கள்.

சத்து மாவு கஞ்சி செய்யும் போது  ஒரு கரண்டி ஆளிவிதைகளை வறுத்து அரைத்து சேர்க்கலாம்.

முக்கிய குறிப்பு

எந்த உணவாக இருந்தாலும் அளவுடன் உண்ண வேண்டும். புதிய உணவுகளை உண்பதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது .

மேலும் கர்ப்பிணிகள் ,குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை ஆல்டர் செய்யும் குணமுள்ள உணவுகளை தவிர்த்தல் நலம்.

No comments:

Post a Comment