Wednesday, June 4, 2014

Kale - கீரைகளின் அரசி - பலன்கள்

கீரைகள் என்றாலே சத்து டானிக் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும்.  அதிலும் கீரைகளின் ராணி என்று ஒரு கீரையை அழைக்கிறார்கள். அது தான் ஆங்கிலத்தில் Kale என்றும் தமிழில் பரட்டைக் கீரை என்றும் அழைக்கப் படுகிறது.   பார்ப்பதற்கு தலை விரிக் கோலத்துடன் இருப்பதால் இந்த பரட்டை என்ற திருநாமத்தை பெற்றிருக்கலாம்.



இதில் காணப்படும் அளவில்லா சத்துக்கள் காரணமாகவே கீரைகளின் ராணி என்ற பெயர் பெற்றுள்ளது. குறைந்த கலோரி ,நிறைய நார்ச்சத்து ,பூச்சியம் அளவு கொழுப்பு சத்து நிறைந்தது இக்கீரை .

உடல் எடை பராமரிக்க விரும்புவோர் தினமும் இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இக்கீரை அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும். 

அதிக நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும் உணவு .ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

இரும்புச்சத்து அதிகம் கொண்டது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் மாட்டு இறைச்சியில் இருப்பதை விட மிக அதிகளவு  இரும்பு சத்து  இதில் இருக்கிறது.

ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கு. ஈரல் ,புற்றுநோய் ,எலும்பு குறைபாடு ,ஆஸ்துமா போன்ற பல நோய்கள் வராம தடுக்க கூடியது .

பார்வை தெளிவாக  இருக்க தினமும் கேல் உணவில் சேர்க்க வேண்டும். அன்றாடம் நமது உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி, வைட்டமின் A மற்றும் வைட்டமின் K கால்சியம் எல்லாம் இந்த கீரையில் இருக்கிறது.

பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் c இதில் காணப்படுகிறது. பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் இதில் இருக்கிறது. 

இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை ஒத்திருக்கிறது. இதனை பொரியலாக செய்தும் மற்றும் பச்சை கீரையை அரைத்து ஜூஸ் போலவும் அருந்தலாம்.

தமிழ்நாட்டின் சென்னை தி.நகர் பகுதி சூப்பர் மார்கெட்டுகளில் கிடைகிறது, வாங்கி பயனடையுங்கள்.

No comments:

Post a Comment