Sunday, June 15, 2014

தண்ணீர் விட்டான் கிழங்கு - Asparagus

ஆஸ்பாரகஸ் கிழக்கு மத்தியதரைகடல் பகுதியை சார்ந்த நாடுகளில் மிக பிரபலமான மரக்கறி உணவு. சீனா தாய்லாந்திலும் அதிகமாக உண்ணபடுகின்றது. இப்போது நம்ம இந்தியாவிலும் கிடைக்கின்றது



ஆஸ்பரகசில் மூன்று வகை உண்டு

* பச்சை நிற வகை , இது பெருவாரியாக விளையும் வகை

* பழுப்பு வெள்ளை நிற வகை, சற்றுசுவை குறைந்த  தன்மையுள்ளது. ஜெர்மனியில் மிக பிரபலம், எந்த அளவுக்கு பிரபலம் என்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் இந்த ஆஸ்பாரகஸ் அறுவடை செய்யப்படும் கிராமங்களில் திருவிழா நடத்தி அந்த ஊர் அழகிக்கு ASPARAGUS QUEEN என்ற பட்டமும் வழங்கப்படுகின்றது. திருவிழாவின்போது சிறந்த ஆஸ்பரகஸ் விளைவித்த விவசாயிகளுக்கும் பரிசும்  கிடைக்கும்

*கத்திரிபூ /ஊதா நிற ஆஸ்பாரகஸ். இது பழத்தின் சுவை கொண்டது

செங்குத்தாக நிலையாக வளருவதால் இதற்கு ஸ்பியர்ஸ் /ஈட்டி என்ற பெயருமுண்டு

அஸ்பாரகசில் உள்ள பல நன்மை தரும் சத்துக்கள்

மாவுசத்து ------- 4.2 கிராம்
நீர்ச்சத்து ------- 92 %
கொழுப்பு --------0.3 கிராம்
புரதம் -------2.6 கிராம்
கலோரி --------100 கிராம் அளவில் 24 கலோரிகள்

அதிக அளவு இரும்புசத்து மற்றும் தாமிர சத்துக்கள் ஆஸ்பாரகசில் உண்டு.

பொட்டாசியம், தையமின், போலிக் அமிலம், வைட்டமின் A, C, E, K, B6, RIBOFLAVIN ஆகியன இந்த மரக்கறியில் உள்ளன.

- பார்வைக்  குறைபாடுகள் வராமல் காக்கின்றது.

- நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுப்பொருள்.

- ஆஸ்பாரகஸ் எளிதில் சிறுநீர் பிரிவதற்கு உதவுகிறது.

- மேலும் உடலிலுள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றும் Detoxifying ஏஜெண்டாகவும் பயன்படுகிறது.

- உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகின்றது

- இரத்தத்தில் அமிலத்தன்மையை குறைக்கின்றது.

- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கின்றது.

- சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க வல்லது.

- இருதய சம்பந்தமான நோய் அண்டாமல் காக்கின்றது.

- புற்றுநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுப்பொருள்.

இது ஒரு சிறந்த மலமிளக்கி. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து ,உணவு ஜீரணமாவதற்கு உதவுகிறது .

சமைக்கும் முன் மேற்புறத் தோலை சீவி எடுத்து பிறகு இதனை நீரில் வேக வைத்தோ ,அல்லது ஆவியில் வேகவைத்தும் மற்றும் பீன்ஸ் போன்ற காய்களை சமைப்பது போலவும் தயாரித்து உண்ணலாம். குறைந்த நேரத்தில் சமைத்து விடலாம். 

No comments:

Post a Comment