உடலில் தேவையற்ற கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு. தவிர பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமப்படுவார்கள். உடற்பயிற்சி செய்யவும் நேரம் இன்றி பொருளாதார தேவைக்காக ஓடிக கொண்டிருக்கும் மனிதன் சிறிது நேரமாவது தனது உடல் நலத்தில் கவனம் வைத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

உண்ணும் உணவில் சில பொருட்களை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் உடல் எடை கூடாமல் வைத்துக் கொள்ள முடியும். உடல் எடை அதிகரித்திருந்தாலும் குறைப்பதற்கு சில வற்றை தவறாமல் சேர்க்கவேண்டும். அதில் ஒன்று தான் இந்த வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பு.
உடல் பருமன் மற்றும் கொழுப்புச் சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வால்நட் எனப்படும் அக்ரூட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என உணவியல் வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
Walnuts nutrition facts – per 100g
Fat: 65 g
Carbohydrates: 14 g
Fiber: 7 g
Protein: 15 gமனிதனுக்கு ஏற்படும் சில வகைப் புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றலும் அக்ரூட்டுக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நினைவுத்திறனை அதிகரிக்கும் ஒமேகா 340 ஆசிட்டுகள் அக்ரூட்டில் அதிகம் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் வரை பாரபட்சமில்லாமல் சாப்பிடலாம். ஆண்டி ஆக்சிடன்ட்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக கொண்டிருப்பவர்கள் அக்ரூட் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பின் அளவைக் குறைத்து ஸ்லிம்மான, ஆரோக்கியமான தேகத்தைப் பெறலாம்.
இதில் ஏராளமான வைட்டமின் E இருப்பதால் நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். முதுமையைத் தள்ளிப் போடலாம். பென்சில்வெனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட ஆண், பெண்கள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர். முதல் கட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து ஒரு வார காலம் குறிப்பிட்ட அளவிலான அக்ரூட் பருப்புகளை உண்ணக் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து காணப்பட்டது. இதன் மூலம் அக்ரூட் கொழுப்பைக் குறைக்கும் வல்லமை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment