முருங்கை இலை , முருங்கைப் பூ, முருங்கைக் காய்,முருங்கைப் பட்டை என்று அனைத்தும் மிக சிறந்த மருத்துவ குணம் நிரம்பியவை. கிராமங்களில் எல்லோரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு மரம். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளது. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பூவுடன் பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம். இதயத்துக்கும், கல்லீரலுக்கும் நல்லது. முருங்கைப் பட்டை உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து சாப்பிட நரம்புக் கோளாறுக்கு நல்ல மருந்தாகும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப்புண், தலை வலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கை இலை கை கண்ட மருந்தாகும்.
முருங்கை இலை (கீரை) அதிக அளவில் புரதம் நிறைந்தது. மற்ற கீரைகள் மற்றும் மூலிகைத்தாவரங்களில் இருப்பதைவிட மிகுதியாகவே புரதச் சத்து நிறைந்திருப்பது இதன் சிறப்பு. 100 கிராம் கீரையில் 9.8 கிராம் புரதம் உள்ளது. இது அன்றாடம் உடலில் சேர்க்கப்பட வேண்டிய புரத அளவில் 17.5 சதவீதம் ஆகும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு குணமாக முருங்கை இலையை சூப் வைத்தும் குடிக்கலாம். மேலும் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்கும் குணம் கொண்டது.
பெண்களுக்கு தீராத ஒரு பிரச்னை தினமும் முருங்கை கீரையை சேர்த்து கொண்டால் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். இதை பொறியல் செய்து, சூடான சாதத்தில் நெய் விட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சத்தான ஆகாரமாக இருக்கும்.
நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து. மேலும் ,
- பித்தத்தைப் போக்கும்
- உடலுக்குத் தெம்பூட்டும்.
- இதயத்திற்கு நல்லது.
- மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
- கல்லீரலுக்கும் ஏற்றது.
- கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
- சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்
- கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்
- முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.
- இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.
போன்ற பல சிறப்பான பலனைகளைத் தரும் இந்த கீரையை கட்டாயம் நம் உணவில் அடிக்கடி சேர்த்து வரவேண்டும். இந்த கீரை எளிதில் கிடைக்க கூடியதும் ஆகும். தவிர இம்மரத்தை நம் வீட்டிலும் கண்டிப்பாக வளர்த்து வரவேண்டும்.
No comments:
Post a Comment