மழை குறைவு காரணமாகப் பாதிக்கப்படும் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கிறது கோகோபீட்(coco peat) எனப்படும் தேங்காய் நார் கழிவு. மண்ணின் வளத்தை கூட்டுவதற்கும் நீரை சேமித்து வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. வெளிநாடுகளில் பெரும் அளவில் இதனை வைத்து விவசாயமும், தோட்டத்தொழிலும் மேற்கொள்ளப்படுகிறது. வீட்டுத்தோட்டம் போடுபவர்களும் இதனை விரும்பி வாங்கி உபயோகிகின்றனர்.
மண்ணிற்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. எடை குறைவு, இதன் எடையை போல ஏழு மடங்கு நீரை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றலும் கொண்டது.

இதன் சிறப்புத்தன்மைகள்
*100%கரிம வளம் நிறைந்தது
*ஆரோக்கியமான வேர் வளர்ச்சிக்கு உறுதுணை
* மண் இறுக்கத்தை சரிபடுத்துகிறது, நுண்ணுயிர் வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டிற்க்கு உதவுகிறது.
* மண் வளத்தை மேம்படுத்துகிறது , களை மற்றும் வேண்டாத பூச்சிகளை கட்டுபடுத்துகிறது .
* அடிக்கடி நீர் ஊற்ற தேவையில்லை.
*உப்பு ,களர் மற்றும் நல்ல நிலம் ஆகிய அனைத்து மண் வகைகளுக்கும் சிறந்தது
அதிக வெப்பத்தால் நீர் ஆவியாகி நிலம் காய்ந்து போகாமல் இருக்க இதை மேற்போர்வையாக பரப்பி விடலாம். ஊற்றப்பட்ட நீர் அப்படியே தக்கவைக்கபடுகிறது.
* * *
தயாரிப்பு
தேங்காய் நாரினை அப்படியே பயன்படுத்தக்கூடாது அதனை மக்க வைத்து தான் பயன்படுத்த வேண்டும் .கயிறு தயாரிக்கும் ஆலைகளில் கிடைக்கும் இதன் கழிவுகளை சேகரித்து வைத்து பிறகு அதனை உரமாக பயன்படுத்தலாம் .
Coco Peat கடைகளில் கிடைக்கிறது. தேங்காய் நார் கழிவு துகள்களாக மாற்றப்பட்டு செவ்வக வடிவிலோ வட்ட வடிவிலோ இறுக்கமாக தட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
இதனை வாங்கி நீரில் ஊறவைத்தால் அது நன்கு ஊறி தூளாகிவிடும். இத்துடன் மண்புழு உரம், செம்மண்(தேவைபட்டால்), இயற்கை கழிவு உரம்,தேயிலை கழிவுத்தூள் ஆகியவற்றை கலந்து தொட்டியிலிட்டு செடிகளை வளர்க்கலாம்.
No comments:
Post a Comment