'நீரின்றி அமையாது இவ்வுலகு' என்பதை நன்கு தெரிந்தவர்கள் தான் சொல்கிறார்கள் மூன்றாம் உலக யுத்தம் தண்ணீருக்காக இருக்கும் என்று. மழை குறைந்துவிட்டது என்று ஆதங்கப்படத்தான் தெரியுமே தவிர பெய்யும் சிறிது மழையையும் சேமிக்க தெரியாதவர்கள் தான் இன்றைய மக்கள்.

பூமியில் விழும் மழையில் ஒரு பகுதி நிலம் உறிஞ்சியது போக மீதம் அப்படியே கடலுக்குள் சென்று எதற்கும் பிரயோசனம் இன்றி வீணாக கடல் நீரில் கலந்து விடுகிறது.
இவ்வாறு கடலில் கலக்கும் நீரை நிலத்திலேயே சேமித்து நல்முறையில் பயன்படுத்த ஒரு எளிய வழி முறையை இந்தோனேஷியாவில் .Dr. Kamir Pariadin Broto, என்பவர் கண்டுப்பிடித்திருக்கிறார் .
* நீரானது நிலத்தை/மண்ணை சென்றடையாதவாறு கான்க்ரீட் தளத்தால் மூடி வைக்கிறோம். கட்டிடம் எழுப்பும்போது கொஞ்சமேனும் கருணை வைத்து சில பகுதிகளை ஒதுக்கி வைத்து மழை நீர் நிலத்தடியை சென்றடையச் செய்யுங்கள்.
மழை நீர் நிலத்தின் மேற்பரப்பில் விழும்போது உடனே நிலமானது அதனை உறிஞ்சாது அதற்கென இந்த உறிஞ்சும் துவாரங்களை ஏற்படுத்த வேண்டும்
* சுமார் 10 cm அகலம் மற்றும் 80-100 cm ஆழம் இருக்குமாறு துவாரங்கள் தோண்ட வேண்டும் ஜாவாவில் இதற்கு ஸ்பெஷல் உபகரணம் பயன்படுத்துகிறார்கள். நாம் கடப்பாரை போன்றதை பயன்படுதினால் போதும் .
* வாகன நிறுத்துமிடம், கட்டிடங்களின் பின்புறம்/நீர்பாசன வசதியற்ற எந்த இடத்திலும் இவ்வாறான துவாரங்கள் ஏற்படுத்தலாம் .
* இத் துவாரங்களில் இயற்கை, உயிர்கழிவுகள் ஆன காய்ந்த இலை, அழுகிய பழங்கள் (compost) ஆகியவற்றை நிரப்பிமூட வேண்டும். இவற்றை மழை இல்லாத நாட்களில் இயற்கை உரமாக எடுத்து பயன்படுத்தலாம் .
* இந்த துவாரங்களில் எறும்புகள் ,மண்புழுக்கள் இன்னபிற நுண்ணியிரிகள் தாமாக வளர்ந்து நிலத்தடியை வளப்படுத்தும் ..இதனால் நீர் வேகமா நிலத்தில் உறிஞ்சப்படும். முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது
* மேற்புறம் 10 cm ஆக இருப்பதால் கண்டிப்பாக மேற்புரத்தை கம்பி வலையால் மூடி பாதுகாக்கவேண்டும். இலை, காய்ந்த சருகுகளால், மற்றும் organic கழிவுகளால் நிரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்
* அணில்கள், பறவைகள் போன்ற சிறு உயிரினங்கள் இதில் விழுந்து விட இடம் கொடுக்கக் கூடாது .
* இந்த துவாரத்தில் இலை மற்றும் இயற்கை கழிவுகள் மட்டுமே செல்லுமாறு பார்க்க வேண்டும். பிளாஸ்டிக், சிகரெட் பில்டர் ஆகிய காலத்தால் அழிக்க முடியாதவை இங்கு சேர்ந்தால் இந்த துவாரத்தால் ஒரு பயனும் இல்லை
No comments:
Post a Comment