உடல், மனம் சோர்ந்தால் உடனே நாம் தேடுவது சூடாக ஒரு கப் டீ . புத்துணர்ச்சி கொடுப்பதில் தேநீர்க்கு தனி இடம் உண்டு. பலவகை தேநீர்கள் இருக்கின்றன அதிலும் சீமைச்சாமந்தி தேநீர் வெளிநாட்டவரால் மிகவும் விரும்பி அருந்தப்படும் ஒரு பானம். சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தது. சரும அழகை மேம்படுத்தி வசீகரிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது.

சீமைச்சாமந்தி என்பது டெய்சி வகையை சேர்ந்து ஒரு மலர். நடுபகுதி மஞ்சள் நிறத்துடனும் அதனை சுற்றி அழகிய வெண்ணிற இதழ்களைக் கொண்டது. ஆசியா ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவை கோடைகாலத்தில் அழகாக பூத்துக்குலுங்கும்.
இந்த சீமைச்சாமந்தி பூக்களை பறித்து காயவைத்து தூளாக்கி அதில் இருந்து தேநீர் தயாரிக்கப்படுகிறது.
சென்னையில் பல கடைகளில் இந்த சீமைச்சாமந்தி /கமொமைல் மூலிகை தனியாகவோ அல்லது பிற மூலிகைகளுடன் கலந்தோ விற்கப்படுகின்றது. தேநீராகவும் கிடைக்கிறது.
Pure Chamomile தேனீர் மிக சிறந்தது. இதனை வெறும் சுடுநீரில் அப்படியே போட்டு அருந்த வேண்டும். பால், சர்க்கரை எதையும் சேர்க்கக்கூடாது .நன்கு கொதித்த தண்ணீரில் இந்த தேனீர் பாக்கெட்டை போட்டவுடன் சிறிது நேரத்தில்
தங்க நிறமுள்ள தேனீர் கிடைக்கும். இது ANTI OXIDANTS நிறைந்துள்ள ஒரு பானம்.
சீமைச்சாமந்தி மூலிகை தேனீர் அருந்துவதின் நன்மைகள்
* மாதவிலக்கு கோளாறுகளை குணப்படுத்தவும் ஜலதோஷம் நீரிழிவு சம்பந்தமான நோய்களுக்கும் இந்த மலர்களை ஜப்பானியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
* இது மன அழுத்தத்தை குறைக்கும் .
* நிம்மதியான உறக்கம் வர வேண்டுமா ? தூங்க செல்லும்முன் ஒரு கோப்பை இந்த தேனீர் அருந்தினால் போதும். மன உளைச்சல் ,படபடப்பு நீங்கி நிம்மதியா தூங்கலாம்.
* ஒரு கோப்பை சுடு நீர் அருந்துவதை விட ஒரு கோப்பை கமொமைல் தேநீர் அருந்துவதால் அதிக நன்மை பயக்கும். இந்த தேநீரில் ஆவி பிடிப்பது ஜலதோஷத்துக்கு சிறந்த நிவாரணி.
* ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவிற்கு இது உகந்தது . அஜீரணம், குடல் உபாதைகளுக்கு சிறந்த தீர்வு ,
* மாதவிலக்கின் போது ஏற்படும் வயிறு வலி நீங்க இந்த தேனீர் சிறந்தது.
* கமொமைல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மருத்துவர் ஆலோசனையுடன் ஒப்புதல் பெற்றபின்னர் அருந்தவும் .
* மேலும் இதை அருந்தியவுடன் தூங்கம் வரும் என்பதால் ஆதலால் வாகனங்களை ஓட்டும் முன்னர் அருந்த வேண்டாம். நோயாளிகள் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னரே அருந்தவும் .
* அழகு பராமரிப்பில் மற்றும் தோலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு சீமை சாமந்தி அதிகம் பயன்படுகின்றது .
* இந்த சீமைச்சாமந்தி பருக்கள் மற்றும் தோலில் ஏற்படும் புண்களை ஆற்றும் குணமுள்ளது
* தோலை சுத்தபடுத்தி முகத்துக்கு வசீகரம் தரவல்லது .
இது ஒரு சிறந்த கிருமி நாசினி சிறு வெட்டுகாயங்களுக்கு ,கோடைகாலத்தில் ஏற்படும் கருப்பு திட்டுகளுக்கு ,மற்றும் தோல் அரிப்பு SUN BURN போக்குவதற்கு பயன்படுத்தலாம் ..
* தினமும் இந்த தேனீரை கொண்டு முகத்தை கழுவினால் முகம் பளபளப்புடன் இளமைதோற்றத்துடன் இருக்கும்
* இயற்கையாக சருமத்துக்கு ப்ளீச் (BLEACH ) செய்ய இதனை பயன்படுத்தலாம்.செயற்கை ப்ளீச் பயன்படுவதில் உள்ள பக்க விளைவுகள் இதில் இல்லை
* இந்த தேனீரை முகம் மற்றும் கூந்தலில் கழுவும்போதும் ,அலசும்போதும் பயன்படுத்தினால் இயற்கையாகமெல்லிய தங்க நிறம் கிடைக்கும்.
* உறக்கமின்மையாலும் அதிக களைப்பினாலும் கண்களின் கீழே கரு வளையம் தோன்றும் ..அந்த கரு வளையத்தை நீக்க .இந்த தேனீரை ஐஸ் கியூப்களாக்கி அவற்றை களைப்படைந்த கண்களின் மேலே சிறிது நேரம் வைக்கலாம்.
* பொடுகு தொல்லைக்கும் இந்த கமொமைல் சிறந்த நிவாரணி. இந்த தேனிரினால் தலையை அலசி வர பொடுகு மற்றும் அரிப்பு நீங்கும்.
* சிறு குழந்தைகளுக்கு Diaper அணிவதால் ஏற்படும் nappy rash ஏற்பட்டால் இந்த தேனீரை பருத்தி துணியால் தொட்டு துடைக்க அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும் .
*தினமும் குளிக்கும்போது இந்த தேனீரை தயாரித்து நீருடன் கலந்து குளிக்கலாம்.சருமத்தில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்த இது உதவுகிறது.
எந்த மூலிகை தேனீர் அருந்துவதாக இருந்தாலும் அதற்கு முன் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்றபின்னரே பயன்படுத்தவும் .
No comments:
Post a Comment