Thursday, March 20, 2014

எய்ட்சை விட கொடிய பாலுறவு நோய் - கொனோரியா (Gonorrhea) - அறிகுறிகள்

மனிதர்கள் பயப்படும் எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் சரியான அளவில் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அதே நேரம் இன்னுமொரு பால்வினை நோய் மக்களை வெகுவாக அச்சுறுத்தி வருகிறது. அதன் பெயர் கொனோரியா (Gonorrhea) தமிழில் இதனை வெட்டை நோய் என்பார்கள்.



இந்தநோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என இங்கிலாந்தில் நடக்க இருக்கின்ற மைக்ரோ பயாலஜிஸ்டு மாநாட்டில் நிபுணர்கள் எச்சரிக்க உள்ளனர். இந்த நோய் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை. இந்நோயை எதிர்க்கக் கூடிய வீரியம் மிக்க புதிய ஆன்டிபயாடிக் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கையை மட்டுமே மருத்துவர்கள் தருகிறார்கள்.

இந்நோய் கண்ட நோயாளிகளுக்கு மற்ற சிகிச்சைகளைத் தந்து காலம் தாழ்த்துவதைத் தவிர சுகாதாரத்துறை நிர்வாகிக்களுக்கு வேறு வழியில்லாமல் போகலாம் என இந்த மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது.

ஆண்களுக்கான அறிகுறிகள்:

இந்த நோய் தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஆண் உறுப்புக்களில் இருந்து மஞ்சள் நிற திரவம் வெளிப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று உணர்வு இருந்துக் கொண்டே இருக்கும் .

பெண்களுக்கான அறிகுறிகள்:

பெண்களின் கர்ப்பபைக் கழுத்துப் பிரதேசத்தில் தொற்று ஏற்படும். அதனால்தான் நோய் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. அடிவயிற்றில் வலி ஏற்படும், ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். பெண் உறுப்பில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய மஞ்சள் நிற திரவம் சுரக்கும்.

உறவு வைத்துக் கொண்டால்:

இந்த நோய் தாக்குதல் இருக்கும் போது உறவு வைத்தால் நோய் தொற்று அதிகமாகி சீல் வடியவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

இம்மாநாட்டில் பாலுறவு நோய்கள் சம்பந்தப்பட்ட இங்கிலாந்தின் முன்னணி நிபுணரான பேராசிரியை கேத்தி ஐசன் குரலெழுப்பவுள்ளார். அதே சமயம் பாதுகாப்பான உடலுறவுப் பழக்கங்கள், மேம்பட்ட நோய்க் கண்டுபிடிப்பு பரிசோதனைகள் போன்றவை அவசியம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

Source: Tamil CNN

No comments:

Post a Comment