Sunday, March 9, 2014

கசகசாவின் மருத்துவ குணங்கள்

கைக்கெட்டும் தூரத்தில் மருந்தை வைத்துக்கொண்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவரை தேடிக் கொண்டு ஓடுகிறோம். வீரியமிக்க ஆங்கில மருத்துவத்தின் மீதான பற்று சமீப காலங்களில் வெகுவாக குறைந்து வருவது வரவேற்கத்தக்கது.



மக்கள் மீண்டும் நம் பாரம்பரிய இயற்கை மருத்துவத்திற்கு மாறி வருகிறார்கள். பக்க விளைவுகள் அற்ற அதிக செலவற்ற இயற்கை மருத்துவம் நம் நோயை குணப்படுத்துவதுடன் நமது ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

நம் சமையலறையில் இருக்கும் பொருள்களின் மருத்துவ குணங்கள், சிறப்புகள் என்னவென்று ஒவ்வொன்றாக தொடர்ந்து இந்த பிரிவில் பார்க்கலாம்.


பாப்பி செடியில் இருந்து பெறப்படுகிறது. பாப்பி மலர்களை  அலங்காரத்துகாக பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.  இதன் விதைப்பை முழுவதுமாக காய்ந்த பின் அதனுள்ளே இருக்கும் விதை தான் கசகசா.

அசைவ உணவுகளில் சுவைக்காக கசகசாவை சேர்ப்பார்கள். ஒரு சில இனிப்பு, கேக் வகைகளிலும் சேர்க்கபடுவதுண்டு. சுவை மட்டுமில்லாமல் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தன்மை இதில் இருக்கிறது. ஒரு அளவோடு இதனை சாப்பிட வேண்டும் , அளவுக்கு மீறினால் மயக்கத்தை கொடுக்கும்.

ஓயாமல்  அழுதுக் கொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, அந்த குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறைந்து நிம்மதியாக தூங்கும்.

அம்மை வந்து போன தழும்பு ஒரு சிலருக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுக்கும், அவர்கள் இந்த கசகசாவை ஒரு ஸ்பூன் எடுத்து அத்துடன் கொஞ்சம் வேப்பிலை, கஸ்தூரி மஞ்சளை சேர்த்து அரைத்து தழும்பு இருக்கும் இடங்களில் தொடர்ந்து தடவி வர அம்மை வந்த தழும்பு மறைந்துவிடும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.

தலையில் பொடுகு வந்து அவதி படுபவர்கள் சிறிதளவு கசகசாவை ஊறவைத்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் குளித்து வந்தால் நாட்பட்ட பொடுகும் மறையும்.

No comments:

Post a Comment