இன்றைய தலைமுறையினரால் கண்டுக் கொள்ளப்படாத மிக முக்கியமான ஒன்று வாழையிலையில் சாப்பிடுவது. அது நாகரீகம் அல்ல என்று தவிர்த்து விடுகின்றனர். முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அதை போல அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது.

வாழைப்பழம் நம் உடலின் உட்பகுதியை பாதுகாக்கிறது , வாழை இலை உட்பகுதியுடன் சேர்த்து உடலின் வெளிப்புறத்தையும் அழகாக்கி மெருகூட்டுகிறது. வாழை இலையை பயன்படுத்தும் விதமாக பயன்படுத்தி அதன் பலன்களை பெறுவோம்.
வாழை இலை ஒரு சிறந்த நச்சு முறிப்பான் ஆகும். நல்ல கிருமி நாசினியும்கூட. சுடச்சுட சாப்பாட்டை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அதனால்தான் தீக்காயம் அடைந்தவர்களை வாழை இலையில் படுக்க வைக்கின்றனர். வாழை இலையில் வைத்து சாப்பிடும் போது உணவில் விஷத்தன்மை இருந்தாலும் அதை முறித்துவிடக்கூடிய ஆற்றல் கொண்டது.
நமது விருந்தோம்பலுக்கு வாழை இலைதான் பாரம்பரியக் கலாச்சாரம். ஆனால் இன்றோ வாழை இலை பெரிய ஹோட்டல்களிலும் அரிதாகிவிட்டது. காகித வாழை இலை இயற்கைக் கொடுத்த பலனை எப்படிக் கொடுக்கும். மழை இன்மையால் வாழை இலை வரத்து குறைந்தது ஒரு பக்கம் என்றாலும் தலை வாழை இலை சாப்பாட்டை நாம் மறந்துவிட்டோம் என்பதே சரி.
அழகை மெருகேற்றும்
* சருமப் பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவை அழகை கெடுக்கும் விதத்தில் இருக்கும். இவற்றிற்கு வாழை இலை மிகவும் ஏற்றது. இதன் புதிய இலையை கசக்கி பிழிந்து சாறு எடுத்து அதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
* அழகிற்காக பயன்படுத்தப்படும் கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின் (Allantoin) என்னும் பொருள், வாழை இலையில் இருந்தே எடுக்கப்படுகிறது . கிருமிகளை அழிப்பதுடன், புதிய செல்கள் வளர உதவியும் செய்யும் என்பதே இதற்கான காரணம்.
* இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது.
* குழந்தைகளுக்கு டயாஃபர், இறுக்கமாக ஜட்டி அணிவதால் வரும் அரிப்பில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே வாழை இலைகளைப் பயன்படுத்தி கிரீம் தயாரிக்கலாம். கொசுக்கடிக்கும் இதை பூசலாம். வாழைஇலைச் சாற்றுடன், சிறிது ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து கிரீம் போல செய்து கொள்ள வேண்டும்.
* இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கே மன அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. அதை போக்குவதற்கு மருத்துவரிடம் போவதற்கு பதிலாக வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து உடல் முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். மன அழுத்தம் குறைவதுடன், சருமமும் மென்மையாகும்.
* சருமம் எவ்வித மாசு மருவும் இன்றி மென்மையாக இருக்கும்.
No comments:
Post a Comment