Saturday, March 22, 2014

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வாழைப்பழம்

எளிதாக கிடைப்பதால் வாழைப்பழத்தை பலரும் பெரிதாக எண்ணுவதில்லை. ஆனால் இன்றும் கிராமப் புறங்களில் தினமும்  உணவுக்குப்பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.  

வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்து இரு‌க்‌கி‌ன்றன. ம‌ற்ற பழ‌ங்களை ‌விட பல ந‌ல்ல குண‌ங்களையு‌ம் வாழை‌ப் பழ‌ம் பெ‌ற்று‌ள்ளது.வாழைப்பழம் முக்கனிகளில் (மா, பலா, வாழை) ஒன்றாகும். அனைத்துக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது.



உலகத்திலுள்ள மக்களால் அதிக அளவில் விரும்பிச் சாப்பிடப்படும் பழம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. மிகுந்த வெப்பமும் நீரும் உள்ள இடங்களில் வாழை செழித்து வளரும்.

கற்பூரவள்ளி, ரஸ்தாளி, நாட்டுப் பழம், சிறுவாழை, மலைவாழை, செவ்வாழை,மோரிஸ், நேந்திரன் வாழை என பல வகை வாழைப்பழங்கள் நம் நாட்டில் உண்டு.  இதில் ஏதாவது ஒன்றையாவது தினம் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை விட்டு விலகியே நிற்கும்.

பயன்கள்:

சுக்ரோஸ், ஃப்ரூட்கோஸ் மற்றும் குளுக்கோஸ் என்ற மூன்று வகையான இயற்கைச் சர்க்கரைச் சத்துகள் வாழைப்பழத்தில் உள்ளன. 2 வாழைப் பழங்கள் சாப்பிட்டால் 90 நிமிடங்கள் வேலை செய்யத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.

நம் உடலில் ஏற்படும் குறைபாடுகளைத் தடுக்கவோ அல்லது சரி செய்யவோ உதவும் ஒரே பழமாக வாழைப்பழம் உள்ளதால் தினமும் சாப்பிட வேண்டும்.

ரத்த அழுத்தம்

வாழைப்பழத்தில் பொட்டாசியமும், உப்பும் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைக்கும், தடுக்கும் ஆற்றல் உண்டு.

ரத்த சோகை

வாழைப்பழத்தில் இருக்கும் புரதச்சத்தான டிரிப்டோபன் சோர்வு நீங்கி உற்சாகம் பெறச் செய்கிறது. இதில் உள்ள இரும்புச் சத்து ரத்தத்தில் ஹியூமோகுளோபின் உருவாக உதவுகிறது. எனவே, ரத்த சோகை நோயுடையவர்களுக்கு ஏற்றது.

மாரடைப்பு

தினமும்  21 கிராம் பைஃபர் உண்பது இதய வியாதிகளை 12% அளவு குறைக்கிறது என கண்டறியப்பட்டு உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் 6 கிராம் ஃபைபர் உள்ளது. தினம் 2 வாழைப்பழம் உண்டால் 12 கிராம் பைஃபர் நம் உடலில் சேரும். மாரடைப்பைத் தடுக்கும் .

எலும்பு, பல்

இன்றைய நமது உணவு முறைகளினால் சேரும் அதிகப்படியான உப்பினால்,  உணவிலுள்ள கால்சியம் எலும்புகளை சேராமல் கழிவாக கரைந்து விடுகிறது . இதை தடுத்து கால்ஷியம் அப்சார்ப்ஷனை அதிகமாக்கும் சக்தி வாழைப்பழத்துக்கு உண்டு. அதனால் இது எலும்புகளுக்கும், பல்லுக்கும் நல்லது

அல்சர்

அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும் தன்மை வாழைப்பழத்திற்கு இருக்கிறது.  அல்சர் ஏற்பட்டு வயிற்றில் புண் இருப்பவர்கள் இப்பழத்தை தவறாது சாப்பிட்டு வந்தால் புண் ஆறும். பாலுடன் சேர்த்து சாப்பிடுவதும் இன்னும் நல்லது.  ஏற்கனவே வயிற்றில் காயங்கள் இருந்தாலும் ஆற்றும் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும்.

வாரம் 4 முதல் 6 வாழைபழம் உண்டால் கிட்னி கான்சர் வரும் வாய்ப்பு 40% குறைகிறது.

இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வைட்டமின் பி நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கிறது. வயதானபின் வரும் பார்வை குறைபாட்டை 36% அளவு குறைக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது.

மேலும் ஒரு முக்கியமான தகவல், தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால்  புற்று நோய் வர வாய்ப்பே இல்லை.

புகைப்பழக்கத்தை விடமுடியாமல் தவிப்பவர்கள், வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புகைக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்

No comments:

Post a Comment