Friday, March 14, 2014

உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய் விட்டமின் சி நிறைந்த ஒன்று மட்டுமல்ல, ஏராளமான சிறப்பு தன்மைகள் அத்தனையையும் ஒருங்கே கொண்டது. எந்த விதத்தில் செய்து இதனை உட்கொண்டாலும் இதன் சத்து குறைவதில்லை என்பது இதன் மற்றுமொரு தனிச் சிறப்பு. அதில் ஒரு விதம் தான் ஜூஸ் செய்து பயன்படுத்துவது.


தினமும் நெல்லிக்காய் ஜூஸ் செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது.

நன்கு விளைந்த நெல்லிக்காய்களை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டி மிக்ஸ்யில் அரைத்து வடிகட்டி ஜூஸ் எடுக்கலாம்.

கோடைகாலத்தில் நெல்லிக் காய் ஜூஸ் அருந்தினால் வெயில் காரணமாக உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பலவற்றில் இருந்து விடுதலை பெறலாம். குளிர்ச்சி கொடுக்கும் தன்மை இதில் அதிகம் .

தினமும் காலையில் தேனுடன் இதனை கலந்து குடித்து வந்தால்,

உடல் சோர்வின்றி எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

ஆஸ்துமாவிற்கு மிகவும் நல்லது, குணம் கிடைக்கும்.

கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும்

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை இது தணிக்கும்.

இரத்தம் சுத்தமாகும், விருத்தியாகும்.

மலச்சிக்கலை சீராக்கும். குடல் சம்பந்தமான சிக்கல்கள் சரியாகும்

நீரழிவு நோயாளிகள் தேன், நெல்லிக்காய் சாருடன், சிறிது மஞ்சள் சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

அகம், முகம் இரண்டும் எப்போதும் பொலிவுடன் இருக்கும் இதனை தவறாது அருந்தி வருவது மிகவும்  நல்லது.

No comments:

Post a Comment