Tuesday, March 11, 2014

மூட்டு வலியை விரட்டும் கடுகு

விஷத்தை முறிக்கக்கூடிய தன்மை கடுகுக்கு இருக்கிறது. வீட்ல பெரியவங்க சொல்வாங்க பிரியாணி செய்தாலும் அதிலும் கொஞ்சம் கடுகை போடுங்க என்று. பார்க்க சிறிதாக இருந்தாலும் கடுகின் மருத்துவ குணங்கள் பெரிது.



கடுகு எண்ணையில் ஆன்டி ஆக்சிடெண்ட் மற்றும் ஆன்டி பாக்டிரியல் அதிகம் இருக்கிறது.

கை, கால் மூட்டு வலி, வாயு பிடிப்பு, ரத்தக் கட்டு என்று பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு  கடுகு தான்.

கடுகுடன் பெருங்காயம் சேர்த்து அரைத்து வலியிருக்கும் இடத்தில் பற்று போட வேண்டும். தொடர்ந்துமூன்று நாட்களுக்கு தினமும்  ஒரு வேளை பற்று போட்டு வந்தால், வலி பறந்தே போய்விடும்.

கடுகு எண்ணை தற்போது மளிகைக் கடைகளிலும் கிடைகிறது, அந்த எண்ணையை சிறிது கரண்டியில் எடுத்து லேசாக சூடுபடுத்தி வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால், வலி விரைவில் குணமாகும்.

தொடர் இருமல் இருந்தால் கடுகை பொடியாக்கி அரை ஸ்பூன் பொடியுடன் தேன் கலந்து காலை, மாலை என இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் இருமல் போயே போச்சு..

கடுகு எண்ணெய் பெண்கள் தங்கள், முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும். லேசாக சூடு படுத்திய கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடிகள் மறைந்துவிடும்.

கடுகு எண்ணெயுடன் நன்கு அரைத்த மஞ்சள் கலந்து முகத்தில் பூசிவந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும்.

No comments:

Post a Comment