Tuesday, March 11, 2014

உடல் கொழுப்பை குறைக்க கொள்ளு

உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கக் கூடிய தன்மை கொள்ளுவிற்கு உண்டு என்பதை அறிந்த நம் முன்னோர்கள் கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்றனர். இன்றைய மக்கள் கொள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறோம். நம் உணவில் தினமும் கொஞ்சம் கொள்ளு சேர்த்து வந்தால் தொப்பை காணாமல் போகும்.




சுலபமான வழிமுறைகள் :

கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும், வேகவைத்தும், வறுத்து தூளாக்கியும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொள்ளுப் பருப்பு ஊற வைத்த நீரை, அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்.

இந்த நீரை கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஜலதோஷம் சரியாகும். உடல் உறுப்புகளை திடப்படுத்தும் முக்கியமாக எலும்புகள, நரம்புகளை பலப்படுத்தும்.

வயிறு சம்பந்தமான நோய்களை இந்த கொள்ளு நீர் குணமாக்கும். பெண்களின் கருப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களை குணமாகும்.

கொள்ளை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அதை அப்படியே சூப் வைத்தும் அருந்தலாம், குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வரலாம், உடல் வலுப் பெறும்.

கொள்லை வறுத்து தூள் செய்து வைத்துக் கொண்டு நாம் செய்யும் ரசம் , குழம்பு கொதித்து இறக்கும் தருவாயில் ஒரு ஸ்பூன் போட்டு இறக்கலாம். வாசனையாக இருப்பதுடன் உடலுக்குள் இந்த விதத்தில் சேரும்.

சாதத்தில் நெய்யுடன் இந்த பொடியை கலந்து சாப்பிடலாம்.

இரவில் சிறிது கொள்ளை ஊறவைத்து காலை எழுந்ததும் அதை எடுத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

இப்படி பல விதத்தில் நன்மை செய்யும் கொள்ளை நமது உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் உடம்பில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடை குறைவதுடன், உடல் சக்தி பெறும்.

No comments:

Post a Comment