தனக்குள் பல்வேறு சிறப்புகளை கொண்டது நெல்லி மரம். நெல்லிக்காயை எந்த முறையிலும்,எந்த விதத்திலும் உணவாக, மருந்தாக உபயோகிக்கலாம் என்பது இதன் சிறப்புத் தன்மை. எதன் கூடவும் சேர்த்து பயன்படுத்தலாம், இயல்பு மாறாது, சத்து குறையாது. தினம் ஒரு காய் மட்டுமாவது உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
