Thursday, November 13, 2014

நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் குட மிளகாய்

சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய் என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடை மிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது.

இதற்கு ஒரு பொதுப் பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள். சுவீட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு.

இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், ‘காப்ஸேயில்’ என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகாயின் விதையிலும், தோலின் வெளிப்பகுதியிலும் அடங்கியிருக்கிறது. மீதமுள்ள 90 சதவீத காரத்தன்மை உள்தோல், மத்திய பகுதி, விதையை உற்பத்தி செய்யும் திசுக்கள் அடங்கியுள்ள பகுதிகளில் உள்ளது.

குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும், அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும்.

பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவை களை கட்டுப்படுத்தும் சக்தியும் இதில்  இருக்கிறது.  ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது.

இவை இரண்டும் சக்திமிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்த நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும்.

100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்து:

புரோட்டின் - 0.99 கிராம்.
சக்தி - 31 கலோரி.
சோடியம் - 4 மி.கிராம்.
கொலஸ்ட்ரால் - இல்லை.
கொழுப்பு - 0.3 மி.கிராம்.
தாதுச் சத்து - 6.02 மி.கிராம்.
பொட்டாசியம் - 211 மி.கிராம்.
மெக்னீசியம் - 12 மி.கிராம்.
வைட்டமின் ஏ - 3131 ஐ.யூ.
வைட்டமின் சி - 127.7 மி.கிராம்.
கால்சியம் - 7 மி.கிராம்.
இரும்பு - 0.43 மி.கிராம்.

Monday, November 10, 2014

காய்கறிகளில் விஷம் - வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு

6350293180 பில்லியன் கிலோகிராம் அளவு கழிவு ஆண்டுதோறும் கடலில் கொட்டப்படுகிறது. கடல் மட்டுமின்றி ஆறு ஏரி குளங்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும் சாக்கடை நீர், முறையே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவு நீர், சாயப்பட்டறை, தோல்பதனிடும் ஆலைகளின் கழிவு, இரசாயன கழிவு, மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துபொருட்களின் கழிவு, தடைசெய்யப்பட்ட இரசாயனபூச்சி கொல்லி மருந்துகள் ஆகியன சென்றுக் கலக்கின்றன. இப்படி பட்ட கழிவுகள் கலந்த நீர்நிலைகள் மனிதர்கள் குடிக்கவோ விவசாயத்துக்கு பயன்படுத்தவோ தகுதியற்றவை. கழிவு நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதால் அதில் விளையும் பயிர் மற்றும் காய்கறிகள் பல பக்க விளைவுகள் உண்டாக்குகின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.முறையற்ற இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் அதிக அளவு மக்கள் புற்றுநோய் மற்றும் மரபணு குறைபாடு போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .

காசர்கோடு மற்றும் தக்க்ஷின் கனடா பகுதியில் தொடர்ந்து 20 ஆண்டுகள் வான் வழியாக தெளிக்கப்பட்ட எண்டோ சல்பானின் கொடூர விளைவுகளை அறிந்திருப்பீர்கள். பிறவி குறைபாடுகள் மரபணு குறைபாடுகள், புற்றுநோய், கருப்பை சம்பந்தமான நோய்கள், சரும நோய்கள் என மனதாலும் உடலாலும் அங்கு பிறக்கும் பிள்ளைகளும் அவதிப்பட்டதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல பல குழந்தைகளை உருக்குலைத்த பின் கேரளா 2005 ஆம் ஆண்டும் கர்நாடகா 2011 ஆம் ஆண்டும் என்டோசல்பான் பயன்பாட்டை தடை செய்தன!! ஆனாலும் இன்னும் பல இடங்களில் தடைசெயப்பட்ட இரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் கள்ள விற்பனையில் இருக்கின்றன என்பதற்கு பீஹார் மதிய உணவில், மோநோக்ரோடோபாஸ் இனால் மரணங்கள் சாட்சி .

வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு
-------------------------------------------------

ஒவ்வொரு பொருளிலும் இந்த மருந்து இருக்குமா இல்லை அந்த பூச்சி கொல்லி இருக்குமோ என்று ஆராய்ச்சி செய்ய தனி மனிதனால் இயலாது . ஆகவேதான் வீட்டுத்தோட்டம் மாடித் தோட்டம் காலத்தின் கட்டாயம்.

கேரளாவில் அங்கக வேளாண்மை, இயற்கை ஆர்கானிக் உணவு பொருட்களை வீட்டில் வளர்க்க பயிற்சியும், காய்கறி தாவரங்களை கவனிக்கும் முறைகள் அதற்கான தேவையான விதை, செடி வளர்க்க நாற்று பைகள் ஆகியவற்றையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அளிக்கிறார்கள்.

கொச்சி அருகே முண்டம்வெளி பகுதியை சார்ந்த விவசாயத்துறை அதிகாரி ஜான் ஷெர்ரி மாடிதோட்டத்தில் ஐம்பது பைகளில் காய்கறி தோட்டமமைத்து வெற்றியும் கண்டுள்ளார். இசெடிகளுக்கு தேவையான இயற்கை உரத்தினையும் தானே வீட்டில் தயாரித்துள்ளார்.

எளிய முறையில் உரம் தயாரிப்பு

1. மாட்டு சாண குழம்பு உரக்கலவை

நிலக் கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு, மாட்டு சாணம் ஆகிய அனைத்தையும் தலா ஒரு கிலோ தேவை. இவற்றை ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர் மற்றும் கோமியம் சேர்த்து கலந்து கலனின் வாய் பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும் .இக்கலவை நொதிக்க நான்கைந்து நாட்கள் ஆகும்.

ஐந்து நாட்களுக்கு பின்னர் ஒரு கோப்பை கலவையுடன் பத்து கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும் .

2. பாக்டீரியா பூச்சி கொல்லி

சூடோமொனாஸ் எனும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும் . ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்று பைகளுக்கு பயன்படுத்தலாம். சூடோமோனஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது .

3. மீன் அமினோ அமிலம் உரம்

கடைகளில் கிடைக்கும் மீன் கழிவு மற்றும் வெல்லப்பாகு இரண்டையும் தலா ஒரு கிலோ சேர்த்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு டைட்டாக மூடி வைக்க வேண்டும். பதினைந்து நாட்கள் நொதித்தலுக்கு பின்னர். இக்கலவையை வடிகட்டி அதில் இருந்து இரண்டு மில்லி லிட்டர் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து உரமாக பயன்படுத்த வேண்டும். பூக்கும் தாவரங்களுக்கு இவ்வுரம் மிக சிறந்தது .

4. அசாடரக்டின் /Azadaractin...

இது வேம்பிலிருந்து பெறப்படும் சாறு .
இது ஒரு சிறந்த பூச்சி கொல்லி ..இரண்டு மில்லி லிட்டர் சாறை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியில் இலை மற்றும் வேர் பகுதியில் தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

5. இதெல்லாம் போக சில வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். 

வளரும் செடிகளை அன்போடு பராமரிக்கவேண்டும். நாற்று பைகளை போதிய இடைவெளி விட்டு வைக்க வேண்டும், பைகளை செங்கலின் மீது வைக்கலாம். உரத்தை மாலை நேரங்களில் செடிகளுக்கு இட வேண்டும். .தினமும் காலைவேளையில் நீர்ப்பாய்ச்சி விட வேண்டும்

ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஷெரி தொடர்ந்து அதே நாற்று பைகளை பயன்படுத்தி வருகின்றார். இவரது வழிகாட்டுதலால் சூரநிகரையில் 300 தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவரது குடும்பத்தினர் அனைவருமே இவருக்கு இந்த மாடிதோட்ட பராமரிப்பில் மற்றும் ஆலோசனை வழங்கும் விஷயத்தில் உறுதுணையாக உள்ளார்கள். மேலதிக விவரங்களுக்கு அவரைத்தொடர்பு கொள்ள அணுகவும் - 9447185944

மூலம் : தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்

Friday, November 7, 2014

கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும் குளியல் பவுடர்

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது.சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு - 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்

வெட்டி வேர் - 200 கிராம்

அகில் கட்டை - 200 கிராம்

சந்தனத் தூள் - 300 கிராம்

கார்போக அரிசி - 200 கிராம்

தும்மராஷ்டம் - 200 கிராம்

விலாமிச்சை - 200 கிராம்

கோரைக்கிழங்கு - 200 கிராம்

கோஷ்டம் - 200 கிராம்

ஏலரிசி - 200 கிராம்

பாசிப்பயறு - 500 கிராம்

இவைகளை காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குலைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் நறுமணம் வீசுவதுடன் உடல் பொலிவுடன் இருக்கும் .

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

Saturday, October 11, 2014

நுகர்வோருக்கான முக்கிய உரிமைகள்

பொது மக்கள் ஒவ்வொருவரும் நமக்கான நுகர்வோர் உரிமைகள் என்ன என்பதை அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. இதை புரிந்து கொள்ள ஒரு சட்ட நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. சில அடிப்படை விஷயங்களை தெரிந்துக் கொள்வதன் மூலம் நமது பணம் நேரம் போன்றவை மிச்சமாகும், அதே நேரம் நன்மைகளையும் பெறலாம்.* ஒரு பொருளை வாங்கிய பிறகு அது பிடிக்கவில்லை என்று மீண்டும் அதே கடையில் பொருளைத் திருப்பிக் கொடுத்து பணத்தை பெற நமக்கு உரிமையில்லை. எனவே ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பே சரிவர பார்த்து வாங்க வேண்டும், பொருளுக்குரிய விதிகளை நன்கு அறியவும் வேண்டும்.

* ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் உரிமை நுகர்ருவோருக்கு எப்போதும் இருப்பதில்லை, எனவே ஒப்பந்தத்தை புரிந்துகொள்வது நல்லது. ஒரு வேளை ரத்து செய்யும் உரிமை இருக்கும் என்றால் அதற்கான குறிப்பு ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிடப் பட்டிருக்கும்.

* ஒரு பொருளை உறுதிமொழியுடன் அதாவது வாரண்டியுடன் வாங்கியிருந்தால் அந்த பொருள் தரமானதாக இல்லை என்றால் வாங்கிய நிறுவனத்திலோ அல்லது தயாரித்த நிறுவனத்திடமோ கொடுத்து அதற்க்கான பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

* ஒரு பொருளை அந்த பொருளுக்கென நிர்ணயிக்கப் பட்ட விலையில் நுகருவோருக்கு விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் கடைக்காரருக்கு இல்லை, அதே நேரத்தில் அதிகப் பட்ச விலை நிர்ணயிக்கப் பட்டிருந்தால் அந்த விலைக்கு அதிகமாக விற்கமுடியாது.

* சில்லறை வர்த்தகங்கள்,  தரம் குறைந்த பொருட்களை கணினி மூலமாக விற்றிருந்தால்  ஏழு நாட்கள் அவகாசத்தை சார்ந்திருக்க முடியாது. நுகர்வோர் சாதாரணமாக மூன்று அல்லது நான்கு வார காலத்திற்குள் அந்த அப்பொருளை திருப்பி கொடுக்க முடியும். அப்பொருள் விற்பனைக்காக கடையில் வைக்கப் படும்போது அது ஒரு அழைப்பிதழாக  சட்டப் பூர்வமாக அறிவிக்கப் படுகிறது. வாங்குபவர்  பணம் கொடுக்கும்போது அந்த விற்பனை ஒரு ஒப்பந்தமடைகிறது. கடை உரிமையாளர் பணத்தை பெற்று  பொருளைக் கொடுக்கும்போது அந்த ஒப்பந்தம் முழுமை பெறுகிறது.

* கார் விற்பனை செய்பவர், திடீரென்று ஆசைப்பட்டு கார் வாங்குவோருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அந்த வர்த்தக ஒப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே திருப்பி கொடுக்க வேண்டும். அதனால் உணர்ச்சிவசப்பட்டு, கார் வாங்குபவர்களே கவனமாக இருங்கள்.

* நீங்கள் சகல விதிமுறைகளையும் வாசித்து அறிந்து கொண்டீர்கள் என்று கடைக்காரரிடம் தெரியப்படுத்தினால் நீங்கள் விதிகளை வாசித்துவிட்டீர்கள், புரிந்துக் கொண்டு மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டீர்கள் என்று இந்திய நாட்டின் சட்டம் கருதுகிறது. எனவே பின்னாளில் உங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படுமானால் ‘நான் அந்த விதிகளை வாசிக்கவில்லை’ என்று நீங்கள்  மறுக்க முடியாது.

* ஒரு ட்ராவல்  ஏஜென்சி மூலம் நீங்கள் விடுமுறை கால டிக்கெட் எடுத்திருந்தால் அதற்காக கடன் அட்டையை பயன்படுத்தியிருந்தால் அந்த விடுமுறை நிறுவனம் கலைக்கப் பட்டிருந்தால்/வணிக செயல்பாடுகளை நிறுத்தியிருந்தால் அந்த விடுமுறை பயணச்சீட்டு கணக்கில் வராது.  ஏனென்றால்  நீங்கள் ஒரு ஏஜென்டிடம் பணம் கொடுக்கும் போது கிரெடிட் கார்ட் கம்பெனிகள் அதற்கான செலவை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை..

* புதிய கார் வாங்கினாலும் பழைய கார் வாங்கினாலும் உங்களுக்கான நுகர்வோர் உரிமைகளில் எந்த மாறுபாடும் இல்லை.

* நீங்கள் ஒரு பொருளை வாங்கும் பொழுது நிறுவன தொழிலாளர்கள் அதை உங்கள் வீட்டிற்கு வந்தும் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் அந்த அப்பொருளை கம்பெனிக்கு மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. அதை உங்கள் வீட்டு வாசலில் அவர்கள் சட்டபூர்வமாக வைத்துவிட்டு போகலாம். அல்லது அந்த பொருளை திரும்பவும் கம்பெனிக்கு கொண்டு போவதற்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கலாம்.

மேலும் , முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் வர்த்தக நிறுவனங்கள் ஒரு தடவை விற்ற பொருட்களை  மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் கடமை இல்லை. பல கடைகளில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விற்கப்பட்ட பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு தகுந்ததாக இருப்பின் அவற்றை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இது நல்லெண்ண வெளிப் பாடு தானே தவிர சட்டத்தன்மை வாய்ந்த வரைமுறை இல்லை.

Thursday, September 18, 2014

வனதேவதை - சூரியமணி பகத்

இந்தோனேஷியாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 'மகளிரும் காலநிலை மாற்றமும்' பற்றிய உச்சி மாநாட்டில் பங்கு பெற்றவர்... இவரது  பெயர் சூர்யமணி பகத். இவரது குறிக்கோளும், பணியும் வேறு வேறு அல்ல இரண்டும் ஒன்றே, அது என்னவென்றால் காடுகளை பாதுகாப்பது.

இவரது வயது 34, பல வர்ண சேலை, பிளாஸ்டிக் வளையல், நீண்ட கருங்கூந்தலுடன் மிக எளிமையான அமைதியான தெய்வீகக்களை கொண்ட முகத்தை உடையவர்.இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சோட்டா நகர் ஊரை சேர்ந்தவர். சிறு வயதில் ஏழ்மை மற்றும் தந்தையின் வேலை போனதன் காரணமாக பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.  இவரது குடும்பத்தின் நிலை அறிந்த அந்த ஊரில் உள்ள ஒரு நல்ல மனிதர் இவரது குடும்பத்திற்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி பராமரித்திருக்கிறார்.  அம்மனிதரின் உதவியால் சூர்யா மணியும் மீண்டும் பள்ளி சென்று படித்திருக்கிறார். அப்போதே தான் நன்றாக படிப்பதுடன் அல்லாமல் தன்னை போன்று வறுமை நிலையில் இருக்கும் பிறருக்கும் உதவவேண்டும் என்ற உறுதியை மனதில் விதைத்திருகிறார். கூடவே நமது  இயற்கை வளங்களை உயிராய் மதித்து காக்க வேண்டும் என்று உறுதி பூண்டாராம்.

இவர் சமஸ்க்ருத மொழியில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். இவர் படித்த படிப்பிற்கு கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஆனால் இவர் அதை தவிர்த்து காடுகளை பாதுகாப்பதை குறிகோளாக ஏற்றுள்ளார்.

இவர் சிறு வயதில் காடுகளில் சுள்ளி பொறுக்க சென்றால் அங்குள்ள வன பாதுகாவலர்கள் இவர்களை துஷ்ப்ரயோக சொற்களால் விரட்டுவார்களாம். ஆனால் அதே காவலர்கள் திருட்டுத்தனமாக காட்டில் உள்ள  மரங்களை வெட்டி கள்ள சந்தைக்கு அனுப்புவதை பார்த்துள்ளார்.  பிறகு உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து இத்தகைய செயல்களை முற்றிலும் தடுத்துள்ளார்.

இவரது 20 வயதில்   ஜார்கண்ட் பகுதி வன பாதுகாப்பு திட்டத்தில் ஆர்வலராக இணைந்திருக்கிறார்

மேலும் அம்மாநில மக்கள் அனைவரும் நில பட்டா இல்லாதிருப்பது கண்டுபிடித்து அனைவருக்கும் அதனைபெற்று தந்திருக்கிறார் .அரசுக்கு வனம் பாதுகாப்பு பற்றி 40 ற்கும் மேற்பட்ட கூற்றுக்கள் சமர்ப்பித்துள்ளார்.

இவரது முயற்சியால் கிராம மக்கள் தாங்களே எல்லையை  நிர்ணயித்து பழ மரங்கள் மற்றும் பல்லுயிர் பயன்பெறும் தாவரங்களை பயிரிட்டுள்ளார்கள் .இதற்குமுன் அரசு வருவாய் தரும் பயிர்கள் மட்டுமே பயிரிட்டதாம்.

மேலும் இவர் கிராமத்தில் டோரங் எனும் பழங்குடி கலாச்சார மையம் ஒன்றையும் துவக்கி உள்ளார். ஊனின்றி உறக்கமின்றி பல நாட்கள் கிராமபுரத்தில் நெடுந்தொலைவு கால்நடையாக நடந்து மக்களுக்கு காடுகள் அவற்றை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மாவோயிஸ்ட் கூட்டத்தினரை கூட இவர் கடந்து சென்றுமிருக்கிறார். அவர்களால் தடுத்து நிறுத்தப்படும்போது இக்காரியம் மக்கள் நலனுக்கென கூறுவாராம் .

இவர் கூட்டத்தில் குடி மகன்களின் தொல்லையும் இருக்குமாம். அவர்களிடம் சிறிதும் கோபபடாமல் 'சற்று அமருங்கள் கூட்டம் முடிந்த பின் உங்களுக்கு அருந்த ஏதாவது அளிப்போம்' என்று சொல்லி அவர்களை அமைதி படுத்திவிட்டு இவரது உரையை தொடருவாராம்.

ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் துன்புறுத்தல், மற்றும் கேலி பேச்சு எல்லாம் கடந்து இவர் வந்துள்ளார்.

சில நேரம் காவல் துறையினர் கைது செய்ய வரும்போது எங்களோடு ஜெயிலுக்கு 'ஆடு மாடு பிள்ளைங்கள் எல்லாம் வரும்' என்று சொல்லி அவர்களை மிரட்டி அனுப்பிய நிகழ்வுகளும் உண்டு என்கிறார். இவரது கடும் முயற்சியால் யூகலிப்டஸ் மற்றும் அரபி மரங்களை முற்றாக காடுகளில் இருந்து அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். இந்த இரண்டும் நீரை உறிஞ்சி பிற்கால சந்ததிக்கு பாலைவனத்தை  மட்டுமே பரிசாக அளிக்கக்கூடியவை.

காலநிலை மாற்றம், பாலினம் வனப்பாதுகாப்பு அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக பின்னிபிணைந்தவை என்கிறார் சூர்யமணி பகத். தட்பவெப்ப மாற்றத்தால் மருத்துவ குணம் நிறைந்த சில மரங்கள் கால நேரம் தவறி பூக்கின்றன.

காடுகள் மக்களுக்கு இன்றியமையாத வளங்களை தருகின்றன. ஆறுமாதங்களுக்கு உணவுக்கு பயிர்களை நம்பியிருக்கலாம் அடுத்த ஆறுமாதம் காடுகளே மக்களுக்கு வளங்களால் உதவ முடியும் ஆகவே அவற்றை அழிவில் இருந்து காப்பது நமது கடமை என்கின்றார் இந்த வன தேவதை.

இயற்கை வளங்களை எவ்வித எதிர்பார்ப்புமின்றி காப்பதால் இவரை வன தேவதை என்றழைப்பது பொருத்தமாக இருக்கும் 

Tuesday, September 2, 2014

வாழைத்தண்டில் வீட்டுத்தோட்டம் - புதுமை

தொட்டியில் வீட்டு தோட்டம், பைகளில் தோட்டம், பழைய குழாய்களில் தோட்டம் ,வைக்கோல் பேல்களில் தோட்டம், தேங்காய் நார் கழிவில், பிளாஸ்டிக் பாட்டிலில் மீள் சுழற்சி செய்த பொருட்களில் தோட்டம் இவற்றையெல்லாம் முயற்சித்த மக்கள் அடுத்து வாழை மரத்தின் தண்டு பகுதியிலும் தோட்டம் வளர்த்து இருக்கிறார்கள்.உகாண்டா நாட்டில் வாழை மரம் அதிக விளைச்சல் தரும் பயிர். அந்நாட்டை சேர்ந்தவர்கள் அறுவடைக்கு பின் வெட்டி சாய்த்த தடித்த மரங்களில் குறுகிய வேர் வளர்ச்சி உள்ள தாவரங்களை வளர்த்து வெற்றி கண்டுள்ளனர் .வாழை மரத்தண்டில் செடி வளர்ப்பதால் அதிக அளவு தண்ணீர் தேவையில்லை மரத்தில் உள்ள நீர்த்தன்மையே  போதுமானது.

மேலும் வாழைத்தண்டில் அதிக அளவு சத்துக்கள் உள்ளன இவை வளரும் செடிகளுக்கு சிறந்த ஊட்டசத்தை  அளிக்கும் .

இதில் இயற்கையாகவே நீரை சேமித்து,உட் கிரகித்து வைக்கும் குணம் உள்ளதால் நீர் வீணாகாது, வறண்ட பிரதேசங்களிலும் இம்முறையை  பயன்படுத்தலாம். தோட்டம் போட  வீட்டில் இடம் இல்லை என்ற குறையுமில்லை. நம் நாட்டில் உபயோகமற்ற மீதமுள்ள வீணாகும் மரங்கள் இருந்தால் இப்படி முயற்சிக்கலாம்.

இதற்கு முதலில் படத்தில் உள்ளபடி கொலு படி போன்ற அமைப்பை பழைய ஏணி அல்லது மூங்கில் கட்டைகளை கொண்டு உருவாக்க வேண்டும். குறுக்கும் நெடுக்குமாக கட்டைகளால் உருவாக்குவது சிறந்தது.

இது வாழை மரத்தினை தாங்குவதற்கு .தரையில் வெறும் மரத்தை படுத்தவாறு வைத்தால் பூஞ்சை பாக்டீரியா தாக்குதல் ஏற்பட வாய்ப்புண்டு .இதனை தடுக்கத்தான் இந்த படி போன்ற அமைப்பு.

பிறகு நன்கு தடித்த மர தண்டுகளை படி போன்ற அமைப்பில் கிடை மட்டமாக வைக்க வேண்டும். மரதண்டுகளில் மேற்பகுதியில்  கத்தியால் சிறு குழிகளை. 10 முதல் 15 செண்டி மீட்டர் அகலம் அளவு ஏற்படுத்தி அதில் சிறிதளவு கம்போஸ்ட் /கலப்பு உரம் இட்டு நிரப்ப வேண்டும். ஒரு மரத்தண்டில் இரண்டு வரிசைகள் இடலாம்.

இம்முறைக்கு மண் தேவையில்லை தான் ஆனால் வளரும் செடிகளின்  வேர்கள் கீழ்நோக்கி செல்லாதிருக்க சிறிது கம்போஸ்ட் இடுவது நல்லது.


குறுகிய வேர்கள் கொண்ட செடிகளை தேர்வு செய்து அதன் விதைகளை குழிகளில் இட்டு நிரப்ப வேண்டும். உதாரணத்துக்கு பசலை கீரை, வெந்தய கீரை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றை இம்முறையில் வளர்க்கலாம்.

இம்முறையில் மரங்களை இரண்டு அல்லது மூன்று முறை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம். அதன் பிறகு இந்த மரங்களை துண்டாக வெட்டி இயற்கை உரத்திலும் பயன்படுத்தலாம். 

Tuesday, August 12, 2014

பப்பாளிக்காயின் மருத்துவ பயன்கள்

 பப்பாளிப் பழத்தை  பலரும் விரும்பி சாப்பிடுவோம், அதில் நிறைய சத்துக்கள் இருப்பதை போல பப்பாளிக் காயிலும் விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம் போன்றவை இருக்கின்றன.

மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக நல்லது இந்த காய்.ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும்.

சிறப்பு பலன்கள்:

- சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும்.

- பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

- பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

- பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

- நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

- பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

- பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

- பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

- பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

- பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.

- பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.

- பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

- பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

Friday, August 8, 2014

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆளி விதை (Flax seed/linseed)

பார்பதற்கு ஆளி விதை, கொள்ளு போன்று பிரவுன் நிறத்தில் இருக்கும். பண்டைய காலத்தில் இந்த ஆளிவிதையை உடையாக பலர் அணிந்து வந்திருக்கின்றனர். பருத்தி பயன்பாட்டிற்கு  வருவதற்கு முன்பு லினன் துணிகள் இந்த ஆளி விதையில் இருந்து உற்பத்தி செய்யபட்டிருகின்றன.பிற தாவர உணவுகளை விட 75 முதல் 800 மடங்குகள் அதிக அளவிலான lignans ஆளி விதையில் உள்ளன. ஆளி விதையில் எளிதில்  கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன .

ஆளி விதையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் உள்ளன அவற்றில் முக்கியமானவை ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலங்கள். இவை இதயத்திற்கு உகந்தவை. உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து /குறைத்து எடையை சீராக வைக்க உதவுகின்றன. ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது.

லிக்னான்ஸ் (Lignans)ஆளி விதையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜன் எதிர்ப்பு குணங்கள் உள்ளன .

மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது ஆளி விதை . மேலும் அந்நாட்களில் ஹார்மோன் மாற்றத்தால் பெண்களுக்கு ஏற்படும் எரிச்சல் hot flash ஆகியவற்றை குறைக்கவும்இந்த விதைகள் உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன

anti inflammatory குணம் என்பது நாளங்களில் கட்டிகள் வாதம் அழற்சி உருவாகாமல் தடுப்பது ..
மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் இந்த ஆளி விதைக்கு உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

ஆளிவிதையின் சிறப்பு!

இதனை ஒன்றிண்டாக உடைத்து மாவாக சமையலில் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்படியே சாப்பிடக்கூடாது .இதனை சமைக்கும்போது பிசுபிசுவென கொழ கொழப்பு தன்மையுடன் வரும்.  இந்த தன்மை குடலுக்கு மற்றும் ஜீரணத்திற்கு மிகவும்  நல்லது. எளிதில் சீரணமாகி மலசிக்கல் ஏற்படாமல் மற்றும் கழிவுகளை துப்புரவு செய்து விடுகின்றது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர் செய்கிறது.

இதனை புளியோதரை மற்றும் வற்றல் குழம்பு செய்யும்போது சற்று வறுத்து பொடியாக கலந்து சமைக்கலாம். மேலும் ப்ரெட் செய்யும்போது இதன் அரைத்த மாவை ப்ரெட் மாவுடன் கலந்து ப்ரெட் செய்யலாம். வெளிநாட்டில் இந்த ரொட்டி பிரபலம் .linseed bread என்பார்கள்.

சத்து மாவு கஞ்சி செய்யும் போது  ஒரு கரண்டி ஆளிவிதைகளை வறுத்து அரைத்து சேர்க்கலாம்.

முக்கிய குறிப்பு

எந்த உணவாக இருந்தாலும் அளவுடன் உண்ண வேண்டும். புதிய உணவுகளை உண்பதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது .

மேலும் கர்ப்பிணிகள் ,குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை ஆல்டர் செய்யும் குணமுள்ள உணவுகளை தவிர்த்தல் நலம்.

Monday, August 4, 2014

உடல் எடையை குறைக்கணுமா ? - எளிய வழி

உடல் உழைப்பு குறைந்து விட்ட இந்நாளில் உடல் பருமன் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குழந்தைகள் அதிகளவில் விரும்பி உண்ணும் பாஸ்ட் புட் ரகங்கள் பீட்சா, பர்கர் முதலியனவை கொழுப்பை அதிகரிக்க செய்கின்றன. பிராய்லர் கோழிகள் வேறு வயதை மீறிய உடல் வளர்ச்சியை கொடுக்கின்றன. காலம் கடந்தப் பின்பு ஏறிவிட்ட உடல் எடையை எப்படி குறைப்பது என தடுமாறி விடுகிறார்கள். சில எளிய முறைகளை தொடர்ச்சியாக கையாண்டால் போதும் கணிசமான அளவு எடை குறைந்துவிடும்.* தினமும் சிறிது தூர  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பட்டினி இருப்பதால் உடல்  எடை நிச்சயமாக குறையாது , மாறாக உடல் பலவீனமாவது தான் மிச்சம். பசி எடுக்கும் போது  மட்டும் உணவு உண்ணவேண்டும். ஒரே நேரத்தில் மொத்தமாக உண்பதைவிட சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து வேளை சாப்பிடலாம்.

* மண்ணுக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

*நொறுக்குத் தீனிகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* இனிப்பு வகைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

* எண்ணையில் வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்த்து, வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

* முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து, வெள்ளைப்பகுதியை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

* செயற்கைக் குளிர்பானங்களுக்கு நமக்கு நாமே தடை விதித்துக்கொள்ள வேண்டும்.

*  பழங்கள் சாப்பிடலாம்.

* அவரை, பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், காலி பிளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் இரவு உணவுடன் 200 கிராம் அளவுக்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப்பயறு, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

* கைக்குத்தல் அவல், முழுக்கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.

*உணவில் பூண்டு வெங்காயம் இஞ்சி சுரைக்காய் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.

* வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு போன்றவற்றை அருந்தி வரலாம்.

*சோம்பு போட்டு காய்ச்சிய தண்ணீரை குடித்து வந்தால் எடை குறையும்.

* கொழுப்புச் சத்துள்ள உணவுப்பொருட்களைத் தவிர்த்தல் மிகவும் நல்லது.

* வீடு துடைப்பது, கழுவது , துணி தோய்ப்பது போன்ற வேலைகளுக்கு வேலைக்காரர்கள், இயந்திரங்களிடம் விடாமல் நீங்களே செய்ய வேண்டும். இதை விட சிறந்த உடற்பயிற்சி வேறில்லை.

* அசைவ விரும்பிகள், அவற்றின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். பொரிப்பது, வறுப்பது தவிர்த்து, தந்தூரி வகைக்கு மாறலாம்.

அனைத்தையும் விட மிக முக்கியமான ஒரு சிறந்த பயிற்சி வீட்டுத் தோட்டம் போடுவது. சிறு சிறு தொட்டிகள் முதல் பெரிய பிளாஸ்டிக் தொட்டிகள் வைத்து  மாடித் தோட்டம் போடுவது இன்று பரவலாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான காய்கறிகள், கீரைகளை கைகெட்டும் தூரத்தில் பறித்துக் கொள்ளலாம் என்பதுடன்  மனதிற்கு உற்சாகம் கொடுத்து  உடலுக்கு ஆரோக்கியத்தையும் சேர்த்தே கொடுக்கிறது.

உடல் எடை குறைய இது ஒரு சிறந்த வழிமுறை.

Friday, August 1, 2014

மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர்.

அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலிவ்  எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் உறுதி கூறுகின்றனர்.பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கும்.

ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன

கொழுப்பை தவிர்க்க எளிய டிப்ஸ்

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

Thursday, July 3, 2014

மூலிகைப் பொடிகளின் மருத்துவ பயன்கள்

நெல்லிக்காய் பொடி,   வல்லாரைப் பொடி,    அருகம்புல் பொடி,     தூதுவளைப் பொடி,   துளசிப் பொடி,   ஆவரம்பூ பொடி,   கண்டங்கத்திரிப் பொடி,     ரோஜாபூ பொடி,   ஓரிதழ் தாமரைப் பொடி,    ஜாதிக்காய் பொடி,   திப்பிலிப் பொடி மற்றும் பல பொடிகளின் மருத்துவ பயன்கள். 
நெல்லிக்காய் பொடி 


பற்கள் எலும்புகளைப் பலப்படுத்தும் படும். உடல் சூட்டை குறைக்கும்.

நாவல் கொட்டைப் பொடி

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரைப்பொடி  

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

அருகம்புல் பொடி  

கொழுப்பை கரைத்து உடல் எடையைக் குறைக்கும்

ரத்தத்தை சுத்தமாக்கும்.

தூதுவளைப் பொடி

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.


துளசிப் பொடி


மூக்கடைப்பு, சுவாச கோளாறுக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி 

இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரிப் பொடி  

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாப்பூ பொடி 

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரைப் பொடி 

ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பொடி

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலிப் பொடி  

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தயப் பொடி  

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகைப் பொடி  

மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவிப் பொடி  

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலைப் பொடி  

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலைப் பொடி  

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

கடுக்காய் பொடி 

குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.


வில்வப் பொடி


அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கராப் பொடி 

தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி 

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

திரிபலாப் பொடி  

வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும். முக கருமையை போக்கும்

அதிமதுரம் பொடி 

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.


துத்தி இலை பொடி 


உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி 

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி 

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கைப் பொடி

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.


கீழாநெல்லிப் பொடி  


மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

கோரைகிழங்கு பொடி 

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனிப் பொடி 

சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணிப் பொடி 

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.


முருஙகைவிதைப் பொடி


ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி 

பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.


பாகற்காய் பொடி 


குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி 

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சுக்குப் பொடி 

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

வெட்டி வேர்ப் பொடி 

நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

நன்னாரிப் பொடி  

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

பூலாங்கிழங்குப் பொடி

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்புப் பொடி  

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலைப் பொடி  

உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.


மருதாணிப் பொடி 


கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி 

பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Sunday, June 15, 2014

தண்ணீர் விட்டான் கிழங்கு - Asparagus

ஆஸ்பாரகஸ் கிழக்கு மத்தியதரைகடல் பகுதியை சார்ந்த நாடுகளில் மிக பிரபலமான மரக்கறி உணவு. சீனா தாய்லாந்திலும் அதிகமாக உண்ணபடுகின்றது. இப்போது நம்ம இந்தியாவிலும் கிடைக்கின்றதுஆஸ்பரகசில் மூன்று வகை உண்டு

* பச்சை நிற வகை , இது பெருவாரியாக விளையும் வகை

* பழுப்பு வெள்ளை நிற வகை, சற்றுசுவை குறைந்த  தன்மையுள்ளது. ஜெர்மனியில் மிக பிரபலம், எந்த அளவுக்கு பிரபலம் என்றால் ஜெர்மனியின் பல பகுதிகளில் இந்த ஆஸ்பாரகஸ் அறுவடை செய்யப்படும் கிராமங்களில் திருவிழா நடத்தி அந்த ஊர் அழகிக்கு ASPARAGUS QUEEN என்ற பட்டமும் வழங்கப்படுகின்றது. திருவிழாவின்போது சிறந்த ஆஸ்பரகஸ் விளைவித்த விவசாயிகளுக்கும் பரிசும்  கிடைக்கும்

*கத்திரிபூ /ஊதா நிற ஆஸ்பாரகஸ். இது பழத்தின் சுவை கொண்டது

செங்குத்தாக நிலையாக வளருவதால் இதற்கு ஸ்பியர்ஸ் /ஈட்டி என்ற பெயருமுண்டு

அஸ்பாரகசில் உள்ள பல நன்மை தரும் சத்துக்கள்

மாவுசத்து ------- 4.2 கிராம்
நீர்ச்சத்து ------- 92 %
கொழுப்பு --------0.3 கிராம்
புரதம் -------2.6 கிராம்
கலோரி --------100 கிராம் அளவில் 24 கலோரிகள்

அதிக அளவு இரும்புசத்து மற்றும் தாமிர சத்துக்கள் ஆஸ்பாரகசில் உண்டு.

பொட்டாசியம், தையமின், போலிக் அமிலம், வைட்டமின் A, C, E, K, B6, RIBOFLAVIN ஆகியன இந்த மரக்கறியில் உள்ளன.

- பார்வைக்  குறைபாடுகள் வராமல் காக்கின்றது.

- நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுப்பொருள்.

- ஆஸ்பாரகஸ் எளிதில் சிறுநீர் பிரிவதற்கு உதவுகிறது.

- மேலும் உடலிலுள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றும் Detoxifying ஏஜெண்டாகவும் பயன்படுகிறது.

- உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகின்றது

- இரத்தத்தில் அமிலத்தன்மையை குறைக்கின்றது.

- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கின்றது.

- சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க வல்லது.

- இருதய சம்பந்தமான நோய் அண்டாமல் காக்கின்றது.

- புற்றுநோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுப்பொருள்.

இது ஒரு சிறந்த மலமிளக்கி. இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து ,உணவு ஜீரணமாவதற்கு உதவுகிறது .

சமைக்கும் முன் மேற்புறத் தோலை சீவி எடுத்து பிறகு இதனை நீரில் வேக வைத்தோ ,அல்லது ஆவியில் வேகவைத்தும் மற்றும் பீன்ஸ் போன்ற காய்களை சமைப்பது போலவும் தயாரித்து உண்ணலாம். குறைந்த நேரத்தில் சமைத்து விடலாம். 

Friday, June 13, 2014

ஆண்களின் மலட்டுதன்மையை போக்கும் அத்திப்பழம்

அத்திப்பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.அத்திப் பழங்கள் 6 - 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி என்பது Ficus Carica எனவும், நாட்டு அத்தி என்பது  Racemosa எனவும் தாவரவியலில் குறிப்பிடபடுகிறது.

அத்திப் பழத்தின் சத்துகள்:

அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம்-4 கிராம், கால்ஷியம்-200 மி.கி, இரும்பு-4 மி.கி, வைட்டமின்-100 ஐ.யு, தயாமின்-0.10 மி.கி, கலோரி அளவு-260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.

அத்தியின் மருத்துவப் பயன்கள்:

அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants  உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.

உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

அத்திப் பழம் சீரண சக்தியை தூண்டும். தினசரி சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற உஷ்ண உபாதைகள் அகலும். அத்திப் பழம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளை படுதலையும் போக்கிடும். நாட்டு அத்தியின் பாலை, மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும். உபாதைகள் குறையும்.

நீரழிவு குணமாகும்:

அத்தி மரத்தை லேசாக கீறினால்  பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டாலும் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

காண அரிதாகிவிட்ட இம்மரத்தை அதிகளவில் விவசாய நிலங்களில் நட்டு வளர்த்து வருவது நலம்.  வீட்டுத்தோட்டத்தில் இடம் இருந்தால் அங்கேயும் வளர்க்கலாம் .

Tuesday, June 10, 2014

இளநரையை கருமையாக்கலாம் - இயற்கை முறை

இளநரை பிரச்சனைக்கு டை அடிக்க தயங்குகிறீர்களா ? இனி தயக்கம் வேண்டாம், இயற்கை முறையில் மிக எளிமையாக இளநரையை கருமையாக மாற்றலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இன்றைய இயந்திர உலகில்  சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.இன்றைய உணவு முறை நாவின் சுவையை மட்டுமே முக்கியமாக கருதி தயாரிக்கப்படுகிறது. அதை தான் நாமும் விரும்பி சாப்பிடுகிறோம். துரித உணவு என்ற பெயரிலும் எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றையும் உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. இதனால் உருவாகும் வாயு,  பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும்.

மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது.  எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை  மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

பெரிய நெல்லிக்காய் கொஞ்சம், எலுமிச்சை இலைகள் கொஞ்சம் எடுத்துக் கொண்டு இரண்டையும் பசும்பால் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். தலை  முடியை நன்கு பிரித்து விட்டுக் கொண்டு இந்த கலவையை நன்றாக பூசவும்.  ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலசவேண்டும்.

சில நாட்களில் இளநரை மாறி கருமையாக முடி ஜொலிக்கும்.  மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும்.

Wednesday, June 4, 2014

Kale - கீரைகளின் அரசி - பலன்கள்

கீரைகள் என்றாலே சத்து டானிக் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும்.  அதிலும் கீரைகளின் ராணி என்று ஒரு கீரையை அழைக்கிறார்கள். அது தான் ஆங்கிலத்தில் Kale என்றும் தமிழில் பரட்டைக் கீரை என்றும் அழைக்கப் படுகிறது.   பார்ப்பதற்கு தலை விரிக் கோலத்துடன் இருப்பதால் இந்த பரட்டை என்ற திருநாமத்தை பெற்றிருக்கலாம்.இதில் காணப்படும் அளவில்லா சத்துக்கள் காரணமாகவே கீரைகளின் ராணி என்ற பெயர் பெற்றுள்ளது. குறைந்த கலோரி ,நிறைய நார்ச்சத்து ,பூச்சியம் அளவு கொழுப்பு சத்து நிறைந்தது இக்கீரை .

உடல் எடை பராமரிக்க விரும்புவோர் தினமும் இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இக்கீரை அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும். 

அதிக நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும் உணவு .ஜீரணக்கோளாறு மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் இருப்பவர்கள் அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

இரும்புச்சத்து அதிகம் கொண்டது. உதாரணமாக சொல்லவேண்டுமென்றால் மாட்டு இறைச்சியில் இருப்பதை விட மிக அதிகளவு  இரும்பு சத்து  இதில் இருக்கிறது.

ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கு. ஈரல் ,புற்றுநோய் ,எலும்பு குறைபாடு ,ஆஸ்துமா போன்ற பல நோய்கள் வராம தடுக்க கூடியது .

பார்வை தெளிவாக  இருக்க தினமும் கேல் உணவில் சேர்க்க வேண்டும். அன்றாடம் நமது உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி, வைட்டமின் A மற்றும் வைட்டமின் K கால்சியம் எல்லாம் இந்த கீரையில் இருக்கிறது.

பசலைக்கீரையை விட அதிக அளவு விட்டமின் c இதில் காணப்படுகிறது. பாலில் இருப்பதைவிட அதிக அளவு கால்சியம் இதில் இருக்கிறது. 

இந்த கீரை சுவையில் முருங்கை இலையின் சுவையை ஒத்திருக்கிறது. இதனை பொரியலாக செய்தும் மற்றும் பச்சை கீரையை அரைத்து ஜூஸ் போலவும் அருந்தலாம்.

தமிழ்நாட்டின் சென்னை தி.நகர் பகுதி சூப்பர் மார்கெட்டுகளில் கிடைகிறது, வாங்கி பயனடையுங்கள்.

Tuesday, June 3, 2014

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தீர்வுகள்

ஆண் பெண் இருவரின் 13-19 வயது வரையிலான “டீன்-ஏஜ்’ பருவம் மிகுந்த குழப்பமானது என்பார்கள்.  ஆனால் இது தான் ஒவ்வொருத்தரின் முக்கியமான காலகட்டம். இந்த வயதில் சரியான வழிநடத்துதல் கிடைக்கப் பெற்றவர்கள்  வாழ்வில் சிறந்து விளங்குகிறார்கள் . மற்றவர்களோ திசை மாறி விடுகிறார்கள். டீன்-ஏஜ் பருவத்தில் இருப்பவர்களை  அவர்களின் பெற்றோர்களே புரிந்துக் கொள்வது சிரமம்.

அவர்களுக்கு ஏற்ற மாதிரி பெற்றோர் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆனால் இவர்களின் நலனில் அக்கறை என்பது வெறும் பேச்சளவில் கூட இல்லை . இவர்களின்  உடல்,மன  நலனில் கவனம் வைப்பதன் மூலமே ஒரு நல்ல சமூக கட்டமைப்பு உருவாகும். இப்பருவத்து பெண்களுக்கு சில மன ரீதியிலான, உடல் ரீதியிலான பிரச்சனைகள், மாறுதல்கள் ஏற்படும். அவை எத்தகையவை என்பதை  அவர்களின் பெற்றோர்கள் புரிந்து  அதன் படி நடந்துக் கொள்வது நல்லது.

குழந்தைப் பருவத்தில் எவ்வளவு அக்கறையோடு ஒரு குழந்தை கவனிக்கப்பட்டு வளர்க்கப் பட்டதோ அதை விட இரு மடங்கு கவனம்  டீன் ஏஜ் பெண்ணை வளர்பதிலும் தேவைப்படுகிறது.

* பூப்பெய்துவதில் சில பெண்களுக்கு கால தாமதம் ஏற்படலாம். உடல் உறுப்பு வளர்ச்சி சரியாக இருந்தால் 16 வயது வரை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி இல்லையெனில், உடன் மருத்துவரை அணுகுவது நல்லது.

* டீன்ஏஜ் பெண்களின் மாதவிடாய் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட நிகழலாம். இது குறித்து பெரிதாக பயம் கொள்ள தேவை இல்லை. சரிவிகித ஆரோக்கியமான உணவு அவசியம்.

* மறைவான இடங்களில் முடி வளரத் தொடங்கும், அதை அருவருப்பாக  எண்ணுவார்கள்,  ஹார்மோனின் செயல்பாடு இது என்பதை சொல்லி தெளிவு படுத்தவேண்டும்.

* சிலருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும். இது எண்ணெய் பசையுள்ள தோல், ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வே. ஆனால், இந்த வயதுப் பெண்கள் இதை ஒரு நோய் போல கருதுவர் எனவே, இதுகுறித்து, பெற்றோர்கள் தெளிவாக தங்கள் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், பருக்களை கிள்ளாமல் இருக்க அறிவுறுத்துவது அவசியம். பருக்களை கிள்ளுவதன் மூலம் முகத்தில் ஏற்படக்கூடிய புண், தழும்புகளை பற்றி எடுத்துக் கூற வேண்டும். அவை முகத்தை இன்னும் மோசமாக்கி விடும்  என்பதை அழுத்தமாக கூறவேண்டும். பருக்களை எண்ணி கவலையுற்று தங்களின் படிப்பிலும் கவனம் இன்றி மனதை வருத்திக் கொள்ளும் பெண்கள் இன்று  மிக அதிகம்.

* அடுத்து, இளம் பெண்களுக்கு, சுத்தம் பற்றி தாய்மார்கள் எடுத்துக் கூற வேண்டியது மிக மிக அவசியம். நோய் தொற்று வராமல் இருப்பதற்கு சுகாதாரம் மிக முக்கியம். அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகள் குறித்து கவனமுடன் இருக்க அறிவுறுத்த வேண்டும். தினமும் உள்ளாடைகளை மாற்றவேண்டும், உடல் உறுப்புகளை நன்றாக சுத்தம் செய்வதுடன் நன்கு தோய்த்த உலர்ந்த  உடைகளையே அணிய வேண்டும்.

* தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, அவர்களது உடல் வளர்ச்சி பற்றி நிச்சயமாக சொல்லித்தர வேண்டும்.  திடீரென்று ஏற்படும் உடல் உறுப்பு வளர்ச்சியால் உணர்வுப் பூர்வமாக பலவிதமான மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த பருவத்தில் எல்லோருக்கும் இப்படித் தான் உடல் வளர்ச்சி இருக்கும், இது இயல்புதான், கவலைப்பட வேண்டாம் என்பதை பெற்றோர்கள் எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம். தவிரவும்  மார்பில் கை வைத்து அழுத்தி பார்த்தால் சில சிறு கட்டி போல தென்படும், இது ஏதோ புற்று நோய் கட்டியாக இருக்குமோ என்று பயந்த சிறு பெண்களும் உண்டு. மார்பகங்களின் வடிவமைபிற்கானவை இவை, கவலைப்படும் படி ஒன்றும் இல்லை என்று புரிய வைக்க வேண்டும்.

* இந்த வயதுக்கே உரிய பல்வேறு பிரச்னைகளால், டீன் ஏஜ் குழந்தைகள், பொதுவாக அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால்,ரத்த சோகை ஏற்பட வாய்ப்புண்டு. இவற்றை சரிப் படுத்துவதுடன் ஹீமோகுளோபின் அளவை 10க்கு மேல் வைத்துக் கொண்டால், படிப்பில் முன்னேற்றம், வேலையில் சுறுசுறுப்பு ஆகியவை மேம்படும் .

* உடை நாகரீகமாக இருப்பதை விட நாகரீகமாக உடை இருக்கலாம் என்பதை வலியுறுத்த வேண்டும். அத்தகைய ஆடைகளையே வாங்கிக் கொடுக்கக்  வேண்டும்.

* வெளியிடங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றியும் கூற வேண்டும்.

* பெண்ணின் தாய் தனது பெண்ணுடன் தினமும் சிறிது நேரமாவது கட்டாயமாக செலவழிக்க வேண்டும். அவர்களது உடல்நலம், சந்தேகங்கள், படிப்பு பற்றி பேச வேண்டும் மனம் விட்டு பேச வேண்டும். இது அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன் தாயுடனான நெருக்கத்தையும் பாசத்தையும் மேம்படுத்தும்.

* பொதுவாக டீன் ஏஜ் பெண் பிள்ளைகள் தாயின் அரவணைப்புக்கு ஏங்குவார்கள், அதனால் நீ வளர்ந்துவிட்டாய் என்று கூறி ஒதுக்கி தாய்க்கும் மகளுக்குமான  இடைவெளியை அதிகரித்து விட கூடாது .  சிலர் அம்மாவுடன் தூங்க விரும்புவார்கள், இதை தாய் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு இணைந்து தூங்கும் சமயங்களில் மகளிடம் தாய் மனம் விட்டு பேச ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் , எதை பற்றியும் சந்தேகம் இருந்தால் கேளுமா பதில் சொல்கிறேன் என்று ஊக்கப்படுத்தலாம். கேள்வி கேட்க வைப்பதன் மூலம் மகளின் தற்போதைய மனநிலை நன்கு தெரியவரும். அதற்கேற்றார்ப் போல் ஆலோசனை கொடுத்து மகளை தெளிவு படுத்த முடியும்.

உடல் மாற்றங்கள், ஆண் பெண் நட்பு, காதல் என்று பலவும் உங்கள் பேச்சில் இருக்கலாம், தப்பில்லை.

* டீன் ஏஜ் பருவத்தின் போது தாய்க்கு 45 /46 வயது இருக்கலாம், அந்த வயதில் இயற்கையாக பெண்களுக்கு ஏற்படும்  மெனோபாஸ் போன்ற காரணிகளால் பெண்களின் மனநிலை ஒன்றுபோல் இருக்காது, கோபம, எரிச்சல் போன்றவை ஏற்படுவது சகஜம் ஆனால் இதை மகளிடம் காட்டிவிடக் கூடாது.  மகளின் நன்மையை கருத்தில் கொண்டு தங்களின் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயல வேண்டும்.பெண் குழந்தையை வளர்ப்பதில் தாயின் பங்கு, முக்கியத்துவம் அதிகம் என்பதை எல்லா பெற்றோர்களும் புரிந்துக் கொள்ளவேண்டும்.

Wednesday, May 28, 2014

வெந்தயக் கீரையின் மருத்துவ குணங்கள்

பொதுவாக கீரைகள் அனைத்துமே உடலுக்கு நன்மை செய்பவை, அதில் வெந்தய கீரை மிக முக்கியமான ஒன்று. தொட்டியில் வெந்தயத்தை விதைத்து நமக்கு தேவையான கீரையை மிக எளிதாக கைக்கெட்டும் தூரத்தில் பெறலாம் என்பது ஒரு சிறப்பு.நமது பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு உண்டு.

வெந்தயக் கீரை ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'.

* இதில்  இரும்புச் சத்துப் பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

* 'வைட்டமின்-ஈ' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன.

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி உடலுக்கு வலிமை சேர்க்கும்.

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது.

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன.

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன.

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.

இத்தகைய சிறப்பு மிக்க வெந்தய கீரையை நம் வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து பயன் பெறுவோம்.

Thursday, May 15, 2014

உணவில் இருக்க வேண்டிய அத்தியாவசிய சத்துகள்

பெரும்பாலும் உணவில் என்ன என்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை அறிந்து நாம் உண்பதில்லை. பசிக்கும், தேவைக்கும் சாப்பிடுகிறோம். ஆனால் இவ்வாறு இல்லாமல் நமக்கு தேவையான சத்துக்கள் எவை, அவை எதில் எல்லாம் இருக்கின்றன   என அறிந்துக் கொள்வது அவசியம்.  இதன் மூலம் சத்துக்கள் அற்றவைகளை தவிர்க்கலாம் என்பது ஒரு கூடுதல் தகவல்.இரும்புச் சத்து

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு எவ்வளவு உள்ளது என்பதைப் பரிசோதித்துப் பாருங்கள். பெண்களுக்கு 12.5% கிராமும் ஆண்களுக்கு 14.5% கிராம் இருப்பது அவசியம். 10% கிராமிற்குக் கீழே இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு இரும்புச் சத்து நிறைந்த டானிக்குகள் அல்லது மாத்திரைகளையும் உண்பது அவசியம்.

இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகள்:

கல்லீரல், பசலைக்கீரை, முருங்கைக்கீரை, மாதுளை, பப்பாளி, பேரிச்சம்பழம், உலர்ந்த திராட்சை, பூசணி விதை, பாதாம் பருப்பு, முட்டை, காலிஃபிளவர்.

பி காம்ப்ளெக்ஸ்

அனைத்து பி.காம்ப்ளெக்ஸ் சத்துக்களும் கேச வளர்ச்சிக்கு அவசியம் எனினும், பயாட்டின், அயனோசிட்டால் ஆகிய இரண்டு சத்துக்கள் மிக மிக அவசியமானவை.

பயாட்டின் அதிகமுள்ள உணவு வகைகள்:

கைக்குத்தல் அரிசி, பார்லி, ஓட்ஸ், சோயா பீன்ஸ், வேர்க்கடலை, காலிஃபிளவர், காளான், பாதாம் பருப்பு.

அயனோசிட்டால் அதிகம் உள்ள உணவு வகைகள்:

கல்லீரல், ஈஸ்ட், உலர்ந்த திராட்சை, முளைவிட்ட தானியங்கள், முட்டைகோஸ், வேர்க்கடலை.

அயோடின்

அயோடின் சத்து தலையிலுள்ள தோலுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி கேசவேர்களை உறுதியடையச் செய்து கேசம் உதிருவதைத் தடுக்கிறது.

அயோடின் அதிகம் உள்ள உணவு வகைகள்:

அயோடின் கலந்த உப்பு, கடல் உணவுகள் (மீன் நண்டு இறால்), பசலைக்கீரை.

தாமிரம்

தாமிரச் சத்து முடியின் வேர்களை உறுதியாக்குவதோடு முடி  வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

தாமிரம் அதிகமுள்ள உணவுகள்:

கல்லீரல், கடல் நண்டு, சிப்பி, உலர்ந்த பருப்பு, கொட்டை வகைகள், கீரைகள்.

துத்தநாகம்

துத்தநாகம் உடலில் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றி இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு இரத்த ஓட்டத்தையும் அதிகரிப்பதால் கேசம் உறுதியடைகிறது.

துத்தநாகம் அதிகமுள்ள உணவு வகைகள்:

துவரம் பருப்பு, கிட்னி பீன்ஸ், உளுந்து, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, பாதாம்.

வைட்டமின் 'சி':

வைட்டமின் சி சத்து கேச வேர்களைத் தாக்கும் நோய்களிலிருந்து விடுதலையளிக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ரத்த ஓட்டத்தையும் சீர் செய்யும்.

வைட்டமின் சி அதிகமுள்ள உணவு வகைகள்:

எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா, அன்னாச்சி, பப்பாளி, நெல்லிக்காய், முருங்கக்கீரை, முட்டைகோஸ்.

தண்ணீர்:

முடியின் வேர்கள் உறுதியாக இருக்கவும், அதன் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் தினசரி 10 லிருந்து 12 டம்ளர்கள் நீர் அருந்துவது அவசியம். உங்கள் உணவு முறைகளில் மாற்றம் செய்யுங்கள். கேசம் உதிருவது கணிசமாகக் குறையும்.

Wednesday, May 14, 2014

உடல் பருமனை குறைக்கும் அக்ரூட்

உடலில் தேவையற்ற கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு. தவிர பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமப்படுவார்கள். உடற்பயிற்சி செய்யவும் நேரம் இன்றி பொருளாதார தேவைக்காக ஓடிக கொண்டிருக்கும் மனிதன் சிறிது நேரமாவது தனது உடல் நலத்தில் கவனம் வைத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம். உண்ணும் உணவில் சில பொருட்களை தவிர்த்தும் சிலவற்றை சேர்த்தும் உடல் எடை கூடாமல் வைத்துக் கொள்ள முடியும். உடல் எடை அதிகரித்திருந்தாலும் குறைப்பதற்கு சில வற்றை தவறாமல் சேர்க்கவேண்டும். அதில் ஒன்று தான் இந்த வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்பு.

உடல் பருமன் மற்றும் கொழுப்புச் சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வால்நட் எனப்படும் அக்ரூட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என உணவியல் வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Walnuts nutrition facts – per 100g

Fat: 65 g

Carbohydrates: 14 g

Fiber: 7 g

Protein: 15 gமனிதனுக்கு ஏற்படும் சில வகைப் புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றலும் அக்ரூட்டுக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நினைவுத்திறனை அதிகரிக்கும் ஒமேகா 340 ஆசிட்டுகள் அக்ரூட்டில் அதிகம் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் வரை பாரபட்சமில்லாமல் சாப்பிடலாம். ஆண்டி ஆக்சிடன்ட்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக கொண்டிருப்பவர்கள் அக்ரூட் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பின் அளவைக் குறைத்து ஸ்லிம்மான, ஆரோக்கியமான தேகத்தைப் பெறலாம்.

இதில் ஏராளமான வைட்டமின் E இருப்பதால் நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். முதுமையைத் தள்ளிப் போடலாம். பென்சில்வெனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட ஆண், பெண்கள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர். முதல் கட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து ஒரு வார காலம் குறிப்பிட்ட அளவிலான  அக்ரூட் பருப்புகளை உண்ணக் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து காணப்பட்டது. இதன் மூலம் அக்ரூட் கொழுப்பைக் குறைக்கும் வல்லமை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tuesday, May 13, 2014

தாம்பத்திய வாழ்க்கைக்கு உதவும் பூசணிக்காய்

கோடைக்காலத்தில் உடலில்  உண்டாகும் அதிக வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் அழைப்பார்கள். தவிர இதில் பல சிறப்பான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.இது படர் கொடி வகையைச் சேர்ந்தது. பெண்களுக்கு ஏற்படும் வலிப்பு நோய், சிறுநீர் பிரியாமை முதலியவற்றைக் குணப்படுத்தி விடுகிறது. 1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம்.

உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.

மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் பெறப் பூசணிக்காயைச் சமைத்து உண்டால் போதும், மனத்திற்கு அமைதி ஏற்படும்.

பூசணிக்காய் சர்பத்

நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும்.

இது முக்கியமான மருந்தாகும். இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், உடலின் வெப்பம் தணியவும், ஆணின் உயிரணுக்கள் அடர்த்தியுடன் வெளிப்படவும் இந்த மருந்தை அருந்த வேண்டும்.

பூசணிக்காய் பொடி

பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.

தோல் நீக்கிய பூசணிக்காய்த் துண்டுகளை மிக்ஸி மூலம் சாறாக மாற்றி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் மூலம், சிறுநீர் ஆகியவற்றில் வரும் இரத்தம், நுரையீரல்கள் மற்றும் மூக்கு வழியாக வரும் இரத்தம் முதலியவற்றை இறுகி உறையச் செய்ய முடியும். இரண்டு மூன்று முறை இவ்வாறு அருந்தியதுமே இரத்தம் உறைந்து விடும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் பூசணிக்காயை உணவில் சேர்ப்பது நலம். பூசணிக் கொடியின் இளந்தளிர் இலைகளுக்கும் இதே மருத்துவக் குணங்கள் உள்ளன.

பூசணி சாறு

சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அழுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சாற்றுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும்.

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும். இந்தச் சாறு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகே வேறு வகையான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

பூசணியின் விதைகள்

இவை குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும்.

பூசணிக்காயின் விதைகளை அகற்றிவிட்டுச் சதையை மட்டும் வேக வைக்க வேண்டும். புண்களின்மீது இந்தச் சதையை நன்கு பிசைந்து வைத்துக் கட்ட வேண்டும்.  புண்களினால் ஏற்படும் கெட்ட நாற்றம் நீங்கி, புண்கள் குணமாகும்.

எனவே, பூசணிக்காயை உங்கள் உணவில் தவறாமல்  சேர்த்துக் கொள்ளுங்கள்.  இதன் மருத்துவ பலன்களை பெற்று நலமுடன் வாழுங்கள்.

Monday, May 12, 2014

முட்டையில் இருக்கும் சத்துக்கள்

அன்றாட உணவில் முட்டைக்கு தனி இடம் உண்டு. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகிறது.  முட்டையை விரும்பாத குழந்தைகள் இல்லை என்றே கூறலாம். முட்டையில் அப்படி என்ன என்ன சத்துக்கள் இருக்கின்றன என தெரிந்துக் கொள்வோம்.நாம் முட்டை என்று பொதுவாக சொல்வதும், அதிகமாக சாப்பிடுவதும் கோழி முட்டையைத்தான். அதிக புரதச்சத்து வழங்கும் உணவாகவும், அத்தியாவசிய வைட்டமின்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது.

100 கிராம் முட்டைத் திரவத்தில் 75 கிராம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் 155 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. முட்டையில் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது.  100 கிராம் முட்டையில் 10.6 கிராம் கொழுப்பு உள்ளது. இதனால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் 424 மில்லி கிராம் காணப்படுகிறது.

உடல் பருமனாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிட்டால் மேலும் அதிகமான கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கலாம்.  புரதமும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்தது முட்டை. 12.6 கிராம் புரதமும், 1.12 கிராம் கார்போஹைட்ரேட்டும் 100 கிராம் முட்டைத் திரவத்தில் உடலுக்கு கிடைக்கிறது.

மஞ்சள் கரு வைட்டமின்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வைட்டமின் ஏ, டி, ஈ சத்துக்கள் இதில் நிரம்பி உள்ளது. முட்டையில் கோலைன் எனும் சத்துப்பொருள் உள்ளது. இது மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை தூண்டும் முக்கியப் பொருளாகும். தினசரி உடலில் சேர்க்க வேண்டிய கோலைன் அளவில் பாதி முட்டையின் மூலம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே வளரும் குழந்தைகளுக்கு அவசியம் முட்டை கொடுத்து வரவேண்டும் .

 இதேபோல ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலமும் உள்ளது. இதுவும் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியமான கொழுப்பு அமிலமாகும். தினசரி உடலில் சேர்க்க வேண்டிய வைட்டமின்-ஏ அளவில் 19 சதவீதம் முட்டையில் கிடைக்கிறது.

அதாவது 149 மைக்ரோ கிராம் அளவு காணப்படுகிறது. வைட்டமின்-டி 15 சதவீதம் உள்ளது. இது சருமத்தின் பொலிவை பாதுகாப்பதுடன், பல்வேறு உடற் செயல்களில் பங்கெடுக்கிறது. பி-குழும வைட்டமின்களான தயாமின்(பி-1), ரிபோபி ளேவின்(பி-2), பான்டொதெனிக் அமிலம்(பி-5), போலேட் (பி-9), வைட்டமின் பி-12 ஆகியவை குறிப்பிட்ட அளவில் உள்ளன.

100 கிராம் முட்டை திரவத்தில் 50 மில்லிகிராம் கால்சியம் காணப்படுகிறது. 1.2 மில்லிகிராம் இரும்புத்தாது காணப்படுகிறது. கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுகிறது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கெடுக்கிறது.

இதேபோல மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளன. பொட்டாசியம் இதயத்துடிப்பு மற்றும் ரத்தஅழுத்தத்தை சீராக பராமரிப்பதில் பங்கெடுக்கிறது. மற்ற தாதுக்களும் பல்வேறு உடற்செயல்களில் ஈடுபட்டு உடலை வளப்படுத்துகின்றன.

இத்தகைய சத்துக்கள் நிரம்பிய கோழி முட்டையை தவறாது உணவில் சேர்த்து வரலாம்.